இணையதளங்கள், தகவல்தொடர்புகள் & குக்கீகளுக்கான தனியுரிமை அறிக்கை

உங்கள் தனியுரிமையில் அக்கறை கொண்டுள்ளோம். Mozilla (அதாவது நாங்கள்) உங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் போதெல்லாம், எங்கள் Mozilla தனியுரிமைக் கொள்கை ஆனது நாங்கள் எவ்வாறு அந்தத் தகவல்களைக் கையாளுவோம் என்பதை விவரிக்கிறது.

இந்தத் தனியுரிமை அறிக்கையானது Mozilla ஆல் இயக்கப்படும் இணையதளங்கள் மற்றும் மொபைல் பயன்பாடுகளுக்குப் பொருந்தும், அதில் mozillians.org, mozilla.org, firefox.com மற்றும் webmaker.org ஆகிய டொமைன்களும் உள்ளடங்கும். உதாரணமாக, இதில் bugzilla.mozilla.org, reps.mozilla.org, careers.mozilla.org, developers.mozilla.org, support.mozilla.org, addons.mozilla.org மற்றும் wiki.mozilla.org ஆகியவை அடங்கும்.

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

சமூக ஊடகத் தளங்களில் எங்களுடனான உங்களின் செயல்பாடுகள்; ஒரு பணி, பயிற்சி அல்லது சக விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தால், Mozilla சமூகத்தில் உறுப்பினராகப் பணியாற்றினால்; பயனர் பின்னூட்டத்தைச் சமர்ப்பித்திருந்தால் அல்லது எங்களிடம் பின்னூட்டம் கோரினால்; கணக்கிற்குப் பதிவு செய்திருந்தால்; அல்லது தயாரிப்பு அல்லது கொள்கை விளம்பரங்களில் ஈடுபட்டிருந்தால் போன்ற செயல்கள் மூலம் உங்களது தனிப்பட்ட தகவல்களைப் பெறுவோம்.

 • சமூக ஊடகம்: Twitter மற்றும் Facebook போன்றவற்றில் உள்ள எங்கள் சமூக ஊடகக் கணக்குகளில் ஈடுபட்டிருந்தால், நாங்கள் உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களைப் பெறக்கூடும் இந்த நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தினால், அவர்களின் தனியுரிமைக் கொள்கைகளும் பொருந்தும், மேலும் நீங்கள் அவற்றைப் படிப்பதற்குப் பரிந்துரைக்கின்றோம்.

 • பணி, பயிற்சி & சக விண்ணப்பதாரர்கள்: Mozilla இல் வேலைவாய்ப்பு, பயிற்சி அல்லது சக விண்ணப்பதாரர்கள் எங்களிடம் பெயர், தெரு முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் சுயவிவரத்தைக் கொடுக்க வேண்டும். வாய்ப்புகளைப் பற்றி விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கவும் மற்றும் விண்ணப்பங்களைச் செயலாக்கவும், மதிப்பிடவும் நாங்கள் இந்தத் தகவலைப் பயன்படுத்துவோம். வேலைவாய்ப்பு விண்ணப்பங்களில் எங்களுக்கு உதவ ஒரு மூன்றாம் தரப்பு நிறுவனத்தைப் பயன்படுத்துவோம். மூன்றாம் தரப்பு நிறுவனத்துடனான எங்கள் தரவு நடைமுறைகளைப் பற்றி மேலும் அறிய, எங்கள் Mozilla தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும்.

 • பங்களிப்பாளர்கள்: Mozilla க்கான தன்னார்வப் பங்கேற்பில் ஒரு சமூகப் பங்களிப்பாளராக உங்கள் பங்களிப்புத் தொடர்பாகவும், உங்கள் முயற்சிகளை அங்கீகரிக்கவும் உங்களைத் தொடர்புகொள்ள Mozilla மற்றும் பிறருக்கு உங்கள் மின்னஞ்சல் தேவைப்படலாம். நீங்கள் Bugzilla, Mozilla Reps அல்லது குறியீட்டுத் தளத்திற்கு பங்களிப்பின், உங்கள் மின்னஞ்சல் முகவரியும், உங்கள் பெயரும் எல்லா இணையப் பயனர்களுக்கும் பொதுவில் கிடைக்கும். Mozillians.org இல் சுயவிவரத்தை உருவாக்கினால், அதனை Mozilla பணியாளர்கள் மற்றும் Mozilla பங்களிப்பாளர்களால் அணுக முடியும். உங்களது சுயவிவரத் தரவை, சுயவிவர அமைப்புகளில்திருத்தலாம். திரட்டப்பட்ட தரவை Mozilla சமூகத்தில் காட்சிப்படுத்துமாறு பகிர, நாங்கள் சில நேரங்களில் டேஷ்போர்டுகளின் மூலங்களிலிருந்து (Bugzilla போன்ற) பங்களிப்பாளர் தகவலைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக https://wiki.mozilla.org/Contribute/Dashboards. முடிந்தால், பொதுவில் காட்சிப்படுத்தப்பட்ட தொடர்புத் தகவலைக் குறைக்க முயற்சிப்போம்.

 • பயனர் பின்னூட்டம்: input.mozilla.orgபோன்ற வலைதளங்கள், தயாரிப்பின் பயன்பாட்டு அனுபவம் வழியாக அல்லது மின்னஞ்சல், Bugzilla, IRC, சமூக ஊடகக் கணக்கு, எங்கள் Get Involved பக்கம் போன்ற சேனல்கள் வழியாக அல்லது மாணவத் தூதுவர்கள் போன்ற குழுக்கள் வழியாக எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றிய பின்னூட்டத்தை எங்களுக்கு அளிக்கலாம். உங்கள் கருத்துகள் பொதுவில் அணுகக்கூடியதாக இருக்குமாதலால், இந்த மன்றங்களில் பகிர்ந்துகொள்ளும் போது தனிப்பட்ட தகவல்களைக் குறைக்கவும்.

 • கணக்குகள்: சில சமயங்களில் Marketplace, AMO, MDN மற்றும் Webmaker போன்ற இணையதளங்களில் கணக்கை உருவாக்க, மேம்படுத்துபவர் உள்ளடக்கத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்; பயனர் மதிப்பீடுகள் அல்லது கருத்துகளைச் சமர்ப்பிக்க வேண்டும்; அல்லது சில வகையான பயன்பாடுகளை நிறுவ வேண்டும். உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல்களை அவ்வப்போது பெறலாம்.

 • தயாரிப்பு & கொள்கை விளம்பரங்கள்: எங்களின் சில வலைத்தளங்கள், தயாரிப்பு அல்லது கொள்கை விளம்பரங்களை வழங்குகின்றன. எடுத்துக்காட்டாக, மொபைல் சாதனத்தில் Firefox ஐ நிறுவுவதற்கான இணைப்பை மின்னஞ்சல் அல்லது SMS மூலம் கோரிக்கையிடலாம் அல்லது இணையச் சிக்கல்கள் குறித்து உறுப்பினர்களிடம் தெரிவிக்கலாம். விளம்பரங்களை நிர்வகிப்பதற்கும், நீங்கள் சமர்ப்பிக்கும் தரவைக் கையாள்வதற்கும் மூன்றாம் தரப்பினர்களைப் பயன்படுத்துவோம்.


எங்கள் தயாரிப்புகள், சேவைகள் மற்றும் தகவல் தொடர்புகளின் செயல்பாடு மற்றும் மேம்பாட்டிற்காக நாங்கள் குக்கீகள், தெளிவான GIFகள், மூன்றாம் தரப்பு இணையப் பகுப்பாய்வுகள் சாதனத்தைப் பற்றிய தகவல்கள் மற்றும் IP முகவரிகளைப் பயன்படுத்தக்கூடும்.

 • செயல்பாடு: சில தயாரிப்புகள், சேவைகள் மற்றும் தகவல் தொடர்புகளின் செயல்பாட்டின் மேம்பாட்டிற்காக நாங்கள் குக்கீகள், சாதனத்தைப் பற்றிய தகவல்கள் மற்றும் IP முகவரிகளைப் பயன்படுத்தக்கூடும். எடுத்துக்காட்டாக:

  • உங்களது Firefox அமைப்புகளுக்கு (மொழித் தேர்வுகள் மற்றும் Firefox ஆட்- ஆன்களைப் போல்) ஏற்ற அம்சங்கள் மற்றும் ஆட்- ஆன்களைப் பரிந்துரைப்பதற்காக மற்றும் Firefox அமைப்புகளைப் பற்றிய தகவல்களை நினைவில்கொள்ள நாங்கள் பயன்படுத்தும் குக்கீகள் உதவுகின்றன. மேலும் அவை பயனர் உள்நுழைவு மற்றும் அங்கீகாரமளித்தலில் உதவுவார்கள், எனவே சில Mozilla இணையதளங்களில் கடவுச்சொற்களை உள்ளிடாமல் நுழையலாம்.
  • மொழி மற்றும் நாட்டின் வாரியாக தகவல்தொடர்புகளைத் தனிப்பயனாக்க IP முகவரிகளைப் பயன்படுத்துவோம்.
  • உங்களது அனுபவத்தை தனிப்பயனாக்க, நாடு, மொழி, இயக்குபவர் மற்றும் OEM போன்ற சாதனத்தின் சில தகவல்களைப் பயன்படுத்துவோம்.
 • அளவீடுகள்: எங்கள் தயாரிப்புகள், சேவைகள் தகவல்தொடர்புகள், இணையதளங்கள் ஆன்லைன் பிரச்சாரங்கள், ஸ்நிப்பெட்டுகள், சாதனங்கள் மற்றும் பிற தளங்களிளை பயனர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிய குக்கீகள், சாதனத் தகவல்கள், தெளிவான GIFகள், குக்கிகள் மற்றும் மூன்றாம் தரப்பு இணையப் பகுப்பாய்வுகள் சேவைகள் மற்றும் IP முகவரிகளைப் பயன்படுத்தக்கூடும். நாங்கள் பயன்படுத்துவது:

  • எங்களது இணையதளங்களின் மீது பயனர்கள் எவ்வளவு ஈடுபாட்டுடன் உள்ளார்கள் என்பதை அறிய, உங்களது சாதனத்தில் ஒரு குக்கியை வைக்கும் Google பகுப்பாய்வுகள். தளத்தின் உள்ளடக்கத்தை மேம்பதுத்த இது எங்களுக்கு உதவும்.
  • இணைய உள்ளடக்கத்தில் உள்ள மாறுதல்களைச் சோதிக்க, உங்கள் சாதனத்தில் ஒரு குக்கீயை வைக்கும் Convert.com மற்றும் ShareProgress ஆகிய இரண்டும். பயனர்களுக்குச் சிறந்த இணைய அனுபவத்தை வழங்க இது எங்களுக்கு உதவும்.
  • Firefox இன் பதிவிறக்கப் பக்கத்தில் தெளிவான GIF ஐப் பயன்படுத்தும் DoubleClick மற்றும் Flashtalking ஆகியவை. இது எங்கள் விளம்பரப் பிரச்சாரங்களின் செயல்திறனை அளவிடுவதற்கு உதவுகிறது.
  • எங்கள் Firefox இன் பதிவிறக்கப் பக்கத்தில் JavaScript ஐப் பயன்படுத்தும் Yahoo Dot Pixel. இது எங்கள் விளம்பரப் பிரச்சாரங்களின் செயல்திறனை அளவிடுவதற்கு உதவுகிறது.
  • HTTP பரிந்துரைத் தரவு, எங்கள் பதிவிறக்கப் பக்கத்திற்கு உங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இணையதள டொமைன் அல்லது விளம்பரப் பிரச்சாரத்தை நீங்கள் புரிந்துகொள்ளும் வகையில் எங்கள் பதிவிறக்கப் பக்கத்தை Firefox இன் நிறுவியில் சேர்க்கப்படலாம். எங்கள் விளம்பரப் பிரச்சாரங்களின் செயல்திறனைப் புரிந்துகொண்டு அவற்றை மேம்படுத்துவதற்கு இந்தத் தகவல் உதவுகிறது.
  • அவ்வப்போது மற்ற அளவீட்டு கருவிகள், சோதனை அடிப்படையில் உள்ளன. எடுத்துக்காட்டாக, புதிய அளவீட்டு கருவியை மதிப்பிடுவதற்கு உதவ அல்லது தற்போதுள்ள அளவீட்டு சேகரிப்பைச் சோதிக்க, இதை நாங்கள் செய்யலாம்.

தனிப்பட்ட குக்கீ விருப்பங்களை நீங்கள் கட்டுப்படுத்தலாம், உங்கள் குக்கீ விருப்பங்களை மற்றவர்களுக்கு தெரிவிக்கலாம், இணையப் பகுப்பாய்வு மற்றும் உகந்ததாக்குதல் கருவிகளில் இருந்து வெளியேறலாம்.

 • குக்கீ வரலாறு: உங்கள் Firefox விருப்பத்தேர்வுகளில் கருவிகள்/விருப்பங்கள்/தனியுரிமை வரலாறு பிரிவில் உங்கள் தனிப்பட்ட குக்கீகளை ஏற்க அல்லது மறுக்க முடியும். எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் குறிப்பிட்ட அம்சங்கள் குக்கீகளின் உதவி இல்லாமல் சரியாகச் செயல்பட முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

 • தடமறியாமை: Mozilla இலக்கு விளம்பரங்களை வழங்க மூன்றாம் தரப்பு வலைத்தளங்கள் கண்காணிப்பது கிடையாது. எங்கள் இணையத்தளங்களை அணுகும் போது "தடம் அறியாமை" குறியீட்டை அனுப்ப உங்கள் உலாவியை நீங்கள் கட்டமைத்திருந்தால், அளவீடுகள் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ள எந்தக் கருவிகளையும் Mozilla பயன்படுத்தாது.

 • மின்னஞ்சல்: எங்கள் மார்க்கெட்டிங் தகவல்தொடர்புகளைப் பெறுவது விருப்பத்திற்குரியது, மின்னஞ்சலின் அடிக்குறிப்பில் குழுவிலகலாம் அல்லது உங்கள் Mozilla மின்னஞ்சல் முன்னுரிமைகளைப் புதுப்பிப்பதன் மூலம் குழுவிலகலாம்.

 • பகுப்பாய்வு & உகந்ததாக்குதல்: Mozilla இணையதளங்களுக்கான உங்கள் வருகையைப் பற்றிய தரவுச் சேகரிப்புகளைத் தடுக்க, பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்:

  • Google: Google அனலிட்டிக்ஸ் ஆப்-அவுட் உலாவி ஆட்-ஆனை நிறுவவும், இது உங்கள் வருகைகளை அநாமதேயமாக்குகிறது மற்றும் Google அனலிட்டிக்ஸ்க்கு தரவு பரிமாற்றத்தைத் தடை செய்கிறது. சில Mozilla.org பக்கங்கள் தெளிவான GIFகளைப் பயன்படுத்துகின்றன, இது எங்கள் விளம்பரப் பிரச்சாரங்களின் செயல்திறனைப் புரிந்துகொள்ள DoubleClick உடன் தொடர்பு கொள்கிறது; Google இன் விளம்பர அமைப்புகளில் DoubleClick இன் தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களை நீங்கள் கட்டுப்படுத்தலாம் (உங்கள் Google கணக்கில் உள்நுழைவதற்கு நீங்கள் கேட்கப்படுவீர்கள்).
  • Convert.com: www.mozilla.org.
  • Yahoo: விலக்குவதற்கு, விளம்பர விருப்ப மேலாளரைப் பார்க்கவும்.
  • ShareProgress: உங்கள் உலாவியில் "தடம் அறியாமை" என்பதை இயக்கலாம்.
 • சமூக ஊடகம்: Mozilla வலைத்தளங்களில் உள்ள சமூகப் பகிர்வு பொத்தான்கள், நீங்கள் குறிப்பாகப் பொத்தானைக் கிளிக் செய்யாதவரை, சமூக ஊடக வழங்குநருடன் தரவைப் பகிர்ந்துகொள்ள முடியாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.


சில Mozilla இணையதளங்கள் வாங்கவோ (பயன்பாடுகள் அல்லது கியர் போன்றவை) அல்லது நன்கொடை அளிக்கவோ அனுமதிக்கின்றன. இந்தப் பரிமாற்றங்கள் Mozilla அல்லாத மூன்றாம் தரப்பினரால் மேற்கொள்ளப்படுகின்றன.

 • கட்டணச் செயலாக்கம்: Mozilla எந்த நிதி சார்ந்த தகவலையும் பெறுவதில்லை, அது உங்களிடமிருந்து எங்களின் மூன்றாம் தரப்பு விற்பனையாளருக்கு செயலாக்கத்திற்காக பரிமாற்றப்படுகிறது. பரிவர்த்தனையின் போது மூன்றாம் தரப்பினரின் பெயர் காட்டப்படும்.

 • மோசடித் தடுப்பு: Google வழங்கும் கண்ணுக்குத் தெரியாத reCAPTCHA என்ற மூன்றாம் தரப்பு தொழில்நுட்பத்தை Mozilla செயல்படுத்தியுள்ளது, , இது மோசடி நடவடிக்கைகளை அடையாளம் காண்பதற்காக எங்கள் இணையதளங்களில் சிலவற்றின் பின்னணியில் இயங்குகிறது. கண்ணுக்குத் தெரியாத reCAPTCHA ஐப் பயன்படுத்துவது Google தனியுரிமைக் கொள்கை மற்றும் பயன்பாட்டு விதிகள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.