"தனிப்பட்ட தகவல்" பற்றி நாங்கள் கூறுவது என்ன?
எங்களைப் பொறுத்தவரை, "தனிப்பட்ட தகவல்" என்பது உங்கள் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி போல உங்களை அடையாளம் காண்பிக்கும் ஒரு தகவல் ஆகும்.
இதற்கு அப்பாற்பட்டு வரும் எந்த தகவலும் "தனிப்பட்ட தகவல்கள் அல்லாதவை" ஆகிறது.
உங்கள் தகவலை தனிப்பட்ட தகவல்கள் அல்லாதவற்றில் சேமித்தால், நாங்கள் அதைத் தனிப்பட்ட தகவலின் சேர்க்கையாகக் கருதுவோம். நாங்கள் தரவுத் தொகுப்பிலிருந்து எல்லா தனிப்பட்ட தகவல்களையும் அகற்றினால், மீதமுள்ள தகவல்கள் தனிப்பட்ட தகவல்கள் அல்லாதவை ஆகின்றன.
நாங்கள் எவ்வாறு உங்களைப் பற்றிய தகவலை அறிகிறோம்?
உங்களைப் பற்றிய தகவல்களை இப்போதெல்லாம் அறிகிறோம்:
- நீங்கள் எங்களுக்கு நேரடியாக கொடுக்கிறீர்கள் (எ.கா., Firefox இலிருந்து எங்களுக்கு சிதைவு புகார்களை அனுப்ப தேர்வுசெய்யும்போது);
- எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மூலம் தானாகவே இதைச் சேகரிக்கிறோம் (எ.கா., நாங்கள் உங்கள் Firefox பதிப்பானது புத்தம் புதிதாக இருக்கிறதா என்பதைச் சோதிக்கும் போது);
- வேறு யாராவது எங்களுக்கு உங்களைப் பற்றிய தகவல்களைச் சொல்லும்போது (எ.கா., உங்கள் கணக்கை அமைக்க Thunderbird உங்கள் மின்னஞ்சல் வழங்குநருடன் செயல்புரிகிறது); அல்லது
- நீங்கள் எங்களுக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் நாங்கள் முயற்சித்து உங்களைப் பற்றி மேலும் அறியும்போது (எ.கா., எங்கள் சேவைகள் சிலவற்றிற்கு, மொழியைத் தனிப்பயனாக்க உங்கள் IP முகவரியைப் பயன்படுத்தும்போது).
உங்களைப் பற்றிய எங்களிடம் உள்ள தகவலை வைத்து நாங்கள் என்ன செய்கிறோம்?
நீங்கள் எங்களுக்கு தனிப்பட்ட தகவலை கொடுக்கும்போது, அதை நீங்கள் எங்களுக்கு அனுமதி அளித்த வழிகளில் பயன்படுத்துவோம். பொதுவாக, உங்களுக்கு, எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதில் மற்றும் மேம்படுத்துவதில் எங்களுக்கு உதவ, உங்கள் தகவல்களை பயன்படுத்துகிறோம்.
எப்போது உங்கள் தகவல்களை பிறருடன் பகிர்கிறோம்?
- அதைப் பகிர்வதற்கான உங்கள் அனுமதியைப் பெற்றிருக்கும்போது.
- தயாரிப்புகளையும் சேவைகளையும் உங்களுக்கு செயல்படுத்துவதற்கு அல்லது வழங்குவதற்கு பயன்படுத்துகிறோம், அதுவும், உங்கள் தரவைப் பெறும் நிறுவனங்கள் Mozilla ஆல் அங்கீகரிக்கப்பட்ட வழிகளில் தரவைக் கையாள்வதற்கு ஒப்பந்த அடிப்படையில் கடமைப்பட்டிருக்கிறோம் என்றால் மட்டுமே.
- வெளிப்படையாக இருத்தல் என்ற எங்கள் நோக்கத்தை நிறைவேற்றும்போது. எங்கள் தயாரிப்புகளை சிறப்பாக்க நாங்கள் சில வேளைகளில் தகவல்களை வெளியிட்டு ஒரு திறந்த நிலை இணையத்தை ஊக்குவிக்கிறோம், ஆனால் அப்படி செய்யும்போது, உங்களைப் பற்றிய தகவலை அகற்றிடுவோம், மேலும் உங்களை மீண்டும் அடையாளம் காண்பதற்கான மிகக் குறைந்த அபாயத்தை மட்டுமே வெளியிட முயற்சிப்போம்.
- சட்டத்திற்கு தேவைப்படும்போது. உங்களைப் பற்றிய தகவல்களைக் கேட்டு அரசாங்கத்திடமிருந்தோ அல்லது வழக்கு தொடர்பாகவோ கோரிக்கையைப் பெறும்போதெல்லாம் நாங்கள் சட்டத்தைப் பின்பற்றுவோம். இவ்வாறு, உங்கள் தனிப்பட்ட தகவலை ஒப்படைக்கக் கேட்டிருக்கும்போது, சட்டப்பூர்வமாக தடுக்கப்படாதவரை நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம். இது மாதிரியான கோரிக்கைகளைப் பெறும்போது, அவ்வாறு செய்வது சட்டத்திற்கு தேவைப்படுகிறது என்ற நல்ல நம்பிக்கை இருந்தால் மட்டுமே உங்கள் தனிப்பட்ட தகவலை வெளியிடுவோம். உங்கள் தகவலை வெளியிட, மூன்றாம் தரப்பினரிடமிருந்து வரும் கோரிக்கையை, சட்டப்படி பாதுகாப்பதை அல்லது ஆட்சேபிப்பதைக் குறைப்பதற்கான நோக்கம் இந்தக் கொள்கையில் இல்லை.
- உங்களுக்கோ அல்லது வேறு யாருக்கோ தீங்கைத் தடுக்க வேண்டும் என்று நம்பும்போது. உங்களுடைய, MOZILLA வின் பிற பயனாளிகளுடைய அல்லது பொதுமக்களுடைய உரிமைகள், உடைமைகள் அல்லது பாதுபாப்பு போன்றவற்றைக் காப்பாற்ற நியாயமாகத் தேவைப்படுகிறது என்பதில் நல்ல நம்பிக்கை இருந்தால் மட்டுமே இவ்வாறு உங்கள் தகவலைப் பகிர்வோம்.
- எங்கள் நிறுவனக் கட்டமைப்பு அல்லது நிலை மாறினால், (மறுகட்டமைப்பு செய்தாலோ, அடைந்தாலோ, அல்லது திவாலாகிப் போனாலோ) பின்வருபவருக்கோ அல்லது சார்பு நிறுவனத்திற்கோ உங்கள் தகவலைக் கொடுப்போம்.
எவ்வாறு உங்கள் தனிப்பட்ட தகவலை சேமித்து பாதுகாக்கிறோம்?
உங்கள் தனிப்பட்ட தகவலைப் பெற்றவுடன் அவற்றை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம். நாங்கள் கட்டமைப்பு, வணிக மற்றும் தொழில்நுட்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துகிறோம். எங்கள் முயற்சிகள் இருந்த போதிலும், பாதுகாப்பு மீறல் இருப்பதாக அறிந்தால், தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்கள் எடுப்பதற்காக நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம்.
நாங்கள் உங்கள் தனிப்பட்ட தகவலை எங்களுக்கு தேவைப்படும் நேரத்திற்கு மேல் வைத்துக்கொள்ள விரும்பவில்லை, எனவே எதற்காக அது சேகரிக்கப்பட்டதோ அது வரை மட்டுமே அதை வைத்திருக்கிறோம். ஒரு வேளை அது எங்களுக்கு தேவையில்லை, அதிக காலம் வைத்திருக்க சட்டம் எங்களைக் கேட்கவில்லை என்றால், அதை அழிக்க நாங்கள் நடவடிக்கைகள் எடுக்கிறோம்.
வேறு என்ன நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்?
நாங்கள் ஒரு உலகளாவிய அமைப்பு, எங்களுடைய கணினிகள் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ளன. பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படும் கணினிகளை வழங்கும் சேவை வழங்குநர்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். அப்படியென்றால் மற்றொரு நாட்டிலுள்ள அந்த கணினிகளில் ஒன்றில் உங்கள் தகவல்கள் சென்று சேரலாம், மேலும் அந்த நாடு உங்களுடையதை விட வேறு வகையான தரவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வைத்திருக்கலாம். எங்களுக்கு தகவலைக் கொடுப்பதன் மூலம், இந்த வகையான உங்கள் தகவலின் பரிமாற்றத்தை நீங்கள் ஏற்கிறீர்கள். உங்கள் தகவல் எந்த நாட்டில் இருந்தாலும் பரவாயில்லை, அதனுடன் பொருந்தும் சட்டங்களுக்கு நாங்கள் இணங்குகிறோம், மேலும் இந்த தனியுரிமைக் கொள்கையில் நாங்கள் எடுக்கும் அனைத்து உறுதிப்பாடுகளையும் கடைபிடிப்போம்.
நீங்கள் 13 வயதிற்கு கீழ் இருந்தால், உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் எங்களுக்கு தேவையில்லை, மேலும் அதை நீங்கள் எங்களுக்கு வழங்க வேண்டாம். நீங்கள் ஒரு பெற்றோராக இருந்து 13 வயதிற்கு கீழ் உள்ள உங்கள் குழந்தை அதன் தனிப்பட்ட தகவலைக் கொடுத்திருப்பதாக நம்பினால் தயவுசெய்து உங்கள் குழந்தையின் தகவலை அகற்ற எங்களை அழைக்கவும்.
இந்த கொள்கையை மாற்றினால் என்ன ஆகும்?
நாங்கள் இந்த கொள்கையை மாற்ற வேண்டி இருக்கலாம், மாற்றும்போது உங்களுக்கு அறிவிப்போம்.