Mozilla

Firefox OS தனியுரிமை அறிவிப்பு

MOZILLA உங்கள் தனியுரிமையில் அக்கறை கொண்டுள்ளது. FIREFOX OS எங்களுக்கு தகவல் அனுப்புகின்ற போது, எங்கள் MOZILLA தனியுரிமைக் கொள்கை அந்தத் தகவல்களைக் நாங்கள் கையாளும் விதத்தை விவரிக்கிறது.

தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

  • புதுப்பிப்புகள்: புதுப்பித்த நிலையில் இருக்க, Firefox OS தானாகவே உங்கள் சாதனம் உற்பத்தியாளர் அல்லது அவரின் சார்பில் இயக்கப்படும் ஒரு சேவையுடன் இணைக்கிறது. Firefox OS தானாகவே Firefox Marketplace அல்லது மற்றொரு இடத்திலிருந்து பயன்பாட்டை நிறுவியிருந்தால், அந்த பயன்பாட்டின் டெவலப்பரின் சேவைகளுக்கு ஒரு கோரிக்கையை அனுப்பி நிறுவப்பட்ட பயன்பாடுகளின் புதுப்பித்தல்களுக்காகப் பார்க்கிறது.
  • இருப்பிடம்: நீங்கள் இருப்பிடச் சேவைகளை இயக்கும் போது, GPS, AGPS மற்றும் பிற நில இருப்பிடச் சேவை வழங்குநர்கள் உட்பட பல தரவுப் புள்ளிகள் மற்றும் அமைப்புகளை Firefox OS பயன்படுத்தலாம். உங்கள் சாதனத்தில் Firefox OS "அமைப்புகள்" பயன்பாட்டில் இருப்பிடச் சேவைகளை முடக்கலாம். AGPS சேவை வழங்குநர் விதிமுறைகளைப் பற்றி மேலும் அறிக.
  • ஆரம்ப செயலாக்கம்: பொருத்தமான புதுப்பிப்புகள் மற்றும் பயன்பாடுகளை வழங்கும் பொருட்டு, தொடங்கும் போது Mozilla க்கு Firefox OS ஒருமுறை தரவு பிங்கை அனுப்பும். மேலும் அறிக
  • பயன்பாடுகளின் பயன்பாடு: Firefox Marketplace இல் உள்ளடக்கங்களைக் கண்டறிவதை மேம்படுத்தும் பொருட்டு, Firefox OS ஆனது "பயன்பாடுகளின் பயன்பாட்டு தகவலை" (எ-கா: பயன்படுத்திய நேரம், திறத்தல்/மூடுதல்/சிதைவுகளின் எண்ணிக்கை, Firefox OS சாதனங்களில் இருக்கும் நிறுவல் நீக்கிய பயன்பாடுகளின் பட்டியல்) Mozilla க்கு அனுப்பும். சாதனத்தில் உள்ள Firefox OS இன் “அமைப்புகள்” பயன்பாட்டில் பயன்பாடுகளின் பயன்பாட்டு தகவலைப் பகிர்வதை முடக்கலாம். மேலும் அறிக
  • தேடல் என்ஜின் வழங்குநரின் தகவல்: Firefox OS சாதனங்களில் தேடலை மேம்படுத்தும் பொருட்டு, Firefox OS ஆனது சாதனத்திற்குத்த் தேடல் முடிவுகளை வழங்கும் தேடல் என்ஜின் பற்றிய தகவலை Mozilla க்கு அனுப்பும். சாதனத்தில் உள்ள Firefox OS இன் “அமைப்புகள்” பயன்பாட்டில் தேடல் என்ஜின் வழங்கும் தேடல் முடிவு தகவலைப் பகிர்வதை முடக்கலாம். மேலும் அறிக

  • நீங்கள் Mozilla தவிர பிறரால் உருவாக்கப்பட்ட பயன்பாடுகளைப் பயன்படுத்தினால், அவர்களின் தனியுரிமைக் கொள்கைகளும் பொருந்தும்.
  • மின்னஞ்சல் அல்லது சமூக வழங்குநர் எனப் பல ஒருங்கிணைந்த மூன்றாம் தரப்பு சேவைகளைப் பயன்படுத்த FIREFOX OS உங்களை அனுமதிக்கிறது. அந்தச் சேவைகளின் தனியுரிமைக் கொள்கை அவற்றின் உங்கள் பயன்பாட்டிற்குப் பொருந்தும்.

எங்களை தொடர்பு கொள்ள