தீவிரமான அந்தரங்க உலாவல்

 • தனிப்பட்ட உலாவல்

  நீங்கள் உலாவும்போது பயர்பாக்சு இணைய பின்தொடரிகளை முடக்குகிறது மற்றும் நீங்கள் முடித்த பிறகு உங்கள் வரலாற்றையும் நினைவில் கொள்ளாது.

 • தடமறியல் பாதுகாப்பு

  சில விளம்பரங்கள் உங்களை இணையத்தில் பின்தொடரும் மறைவான தொடரிகளைக் கொண்டுள்ளன. மோசமானது தான் இல்லையா. எங்களுக்கும் தெரியும். அதனால் தான் எங்களின் வலிமையான கருவிகள் அவற்றைக் கடுமையாக நிறுத்துகின்றன.

 • விரைவான பக்க ஏற்றம்

  உலாவலைத் தடைசெய்யும் சில விளம்பரங்கள் மற்றும் சிறுநிரல்களை தடுப்பதின் மூலம், பக்கங்கள் 44% வரையில் வேகமாக ஏறுகின்றன. அதுதான் நமது வெற்றி.

தனிப்பயனாக்கத்தின் அம்சங்கள்

 • நீட்சிகள்

  லாஸ்ட்பாஸ், யூபிளாக் ஆர்ஜின், எவர்நோட் போன்ற ஆயிரக்கணக்கான துணைநிரல்களுடன் பயர்பாக்சைத் தனிப்பயனாக்குங்கள்.

 • தோற்றங்கள்

  பயர்பாக்சை உங்கள் மனதிற்கு ஏற்றவாற்று மாற்றுங்கள்! எங்களின் கருப்பொருள் வகையிலிருந்தஉ புதிய தோற்றத்தைத் தேர்ந்தெடுங்கள் அல்லது உங்கள் சொந்த கருப்பொருளை உருவாக்குங்கள்.

 • கருவிப்பட்டி

  உங்கள் விருப்பத்தில் பயர்பாக்சை அமையுங்கள். எளிதான அணுகலுக்கு அம்சங்களை உங்கள் கருவிப்பட்டையில் சேருங்கள் அல்லது நீக்குங்கள்.

இப்போது 2x வேகத்தில்

மிகவும் வலிமையான உலாவியா? ஆம். பக்கங்களை ஏற்ற குறைந்த நேரம் காத்திருக்க வேண்டுமா? ஆம். பயர்பாக்சு குவாண்டம் முந்தைய பயர்பாக்சை விட இருமடங்கு வேகமானது.

குரோமை விட 30% லேசானது

குறைந்த நினைவகப் பயன்பாட்டால் உங்கள் கணினி மென்மையாக இயங்க அதிக இடம் கிடைக்கிறது. அதற்காக உங்களின் பிற மென்பொருள்கள் உங்களுக்கு நன்றி சொல்லும்.

மேலும் அறிய

சில நிமிடங்களிலேயே குரோமிலிருந்து பயர்பாக்சிற்கு மாறுங்கள்

பயர்பாக்சிற்கு மாறுவது வேகமானது, எளிதானது மற்றும் இடரில்லாதது. பயர்பாக்சு உங்களின் புத்தகக்குறிகள், தானிரப்பிகள், கடவுச்சொற்கள் மற்றும் விருப்பமைவுகளை குரோமிலிருந்து இறக்குமதி செய்கிறது.

மேலும் அறிய