மொசில்லா அறிக்கை வெளியீடு
ஒரு வளமான இணையத்திற்கு வித்திடுங்கள்
திறந்த, உலகளாவிய இணையம் என்பது நாம் பார்த்திராத மிகவும் வலிமையான தொடர்பு மற்றும் கூட்டுப்பங்காற்று வளமாகும். இது மனித முன்னேற்றத்திற்கான நமது ஆழமான நம்பிக்கைகளில் சிலவற்றை உள்ளடக்கியுள்ளது. அது கற்றலுக்கான புதிய வாய்ப்புகளுக்கு உதவுகிறது, பகிர்தல் மனித உணர்வைக் கட்டமைக்கிறது, மக்கள் எல்லா இடங்களிலும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்கிறது.
கடந்த பத்தாண்டுகளில் நாம் இந்த வாக்குறுதி நிறைவேறுவதை பல வழிகளில் கண்டோம். பிரிவுகளைப் பெரிதாக்கவும், வன்முறையைத் தூண்டவும், வெறுப்பை ஊக்குவிக்கவும் மற்றும் உண்மைகளை வேண்டுமென்றே திறக்கவும் பயன்படுத்தப்படக்கூடிய இணையத்தின் ஆற்றலையும் நாம் கண்டுள்ளோம். இதன்மூலம் இணையத்தின் மனித அனுபவத்திற்கான நம்பிக்கையை இன்னும் தெளிவாக முன்வைக்க வேண்டும் ன்பதை நாங்கள் கற்றுக் கொண்டோம். நாங்கள் அதனை இப்போது செய்கிறோம்.
- பூமியில் உள்ள எல்லா மக்களையும் உள்ளடக்கிய ஒரு இணையத்திற்காக நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் — அந்த இணையத்தில் ஒருவரின் மக்களிடப் பண்புகளானது அவரின் இணைய அணுகல், வாய்ப்புகள், அல்லது தரத்தினைத் தீர்மானிக்காது.
- குடிமை வெளிப்பாடு, மனித மாண்பு, மற்றும் தனிப்பட்ட வெளிப்பாடுகளை ஊக்குவிக்கும் ஒரு இணையத்திற்காக நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
- ஆய்வுச் சிந்தனை, அறிவார்ந்த வாதம், பகிரப்பட்ட அறிவு, மற்றும் சரிபார்க்கக்கூடிய உண்மைகளை உயர்த்திப் பிடிக்கும் ஒரு இணையத்திற்காக நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
- ஒரு பொதுவான நன்மைக்காக இணைந்து பணியாற்றும் பல்வேறு சமூகங்களிடையே கூட்டுமுயற்சியை ஊக்குவிக்கும் ஒரு இணையத்திற்காக நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.