இணையம் மக்களுக்காக தான்,
இலாபத்திற்காக அல்ல

வணக்கம். இலாப நோக்கற்ற மொசில்லா குழுமம் இணையத்தின் ஆரோக்கியத்தைப் பேணி காத்திட, கட்டற்று அனைவருக்கும் கிடைத்திட, வாகையர் என்ற பெருமையுடன் உதவி வருகிறது.

எங்களின் தாக்கம்

உலக பொது வளமான இணையத்தைக் காப்பாற்ற தொடர்ந்து பணியாற்றி ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் திறந்த முறையில் அனைவரும் அணுகும் விதத்திலும், இணையக் கல்வி அறிவை முடுக்கிவிடுவதும் இணையத்தை மதிக்கும் ஒவ்வொருவரின் சார்பிலும் பரிந்து பேசுவது.

எங்களின் புத்தாக்கங்கள்

நாங்கள் இணையத்தைப் பயன்படுத்தி திறந்த புத்தாக்க தொழில்நுட்பங்கள் உதவியுடன் உரிம மென்பொருள் பயன்பாட்டிலிருந்தும் நிறுவன சூழல் அமைப்புகளிலிருந்தும் உருவாக்குநர்களை மீட்டு அனைவருக்குமான பாதுகாப்பான வேகமான இணைய அனுபவத்தை கட்டமைக்கின்றோம்.

உங்கள் இணையத்தை கட்டவிழ்

கட்டற்ற இணையம் அமைந்தால் உங்கள் மனம் அதையே தொடரும்

பயர்பாக்சை இன்றே பெற்றிடுங்க