இணையதளங்கள் & தொலைத்தொடர்பு பயன்பாட்டின் விதிமுறைகள்

ஜூன் 23, 2016

பயன்பாட்டு விதிமுறைகள்

1. அறிமுகம்

இந்த முழு ஆவணத்தின் ("விதிமுறைகள்") விதிமுறைகளைக் கவனமாகப் படிக்கவும். ஏனெனில் நீங்கள் ஏதேனும் Mozilla இன் இணையதளங்கள்,("இணையதளங்கள்")அல்லது தொடர்புடைய ஊட்டங்கள், சமூக வலைதளங்கள், செய்திமடல்கள், ஆதாரக் குறியீட்டுக் களஞ்சியங்கள் மற்றும் மின்னஞ்சல்கள்(இணையத்தளங்களுடன் ஒன்றுசேர்த்து இவை ஒட்டுமொத்தமாக "தகவல் பரிமாற்றங்கள்" எனக் குறிக்கப்படுகிறது)ஆகியவற்றைப் பார்வையிடும்போது உங்களின் உரிமைகள் மற்றும் கடமைகளைப் பற்றி இது விவரிக்கிறது. தகவல் பரிமாற்றங்களைப் பெறுவதற்காக அணுகுவதன் மூலம் அல்லது பதிவுசெய்வதன் மூலம், இந்த விதிமுறைகளுக்கு உட்படுவதை ஏற்கிறீர்கள்.

நமது இணையதளங்கள் mozilla.org, mozillians.org, firefox.com, mozillafestival.org, openstandard.com, openbadges.org மற்றும் webmaker.org போன்ற பல்வேறு டொமைன்களை உள்ளடக்கியுள்ளது. எங்கள் இணையதளங்களை Bugzilla@Mozilla, BMO, MozWiki, MoPad, Webmaker, MozReps, MDN, Marketplace, One மற்றும் Done, SUMO, மற்றும் AMO போன்ற புனைப்பெயர்களைக் கொண்டும் அடையாளம் காணலாம். எங்கள் இணையதளங்களில் சில உங்களைப் பிற தரப்பினர்கள் வழங்கிய இணைப்புகள், பயன்பாடுகள் அல்லது செருகு நிரல்களுடன் இணைக்கும் அவை தனிப்பட்ட விதிமுறைகளுக்குட்பட்டது.

2. கணக்கைப் பதிவுசெய்தல்

ஒரு இணையதளத்தின் அல்லது மற்றொரு Mozilla சேவையின் கூடுதல் அம்சங்களை அணுக சில இணையதளங்கள் உங்களைப் பதிவுசெய்யுமாறு கோரிக்கையிடும். பொருந்தினால், கூடுதல் விதிமுறைகள் உங்களுக்கு வழங்கப்படும். உங்கள் கணக்கின் கீழ் நடைபெறும் அனைத்து செயல்பாடுகளுக்கும் நீங்களே பொறுப்பாவீர்கள்.

சில இணையதளங்களில் பதிவுசெய்யும்போது பயனர் பெயரை உருவாக்க உங்களை அனுமதிக்கிறது. உங்கள் பயனர் பெயர் நமது ஏற்கத்தக்க பயன்பாட்டு கொள்கை க்கு இணங்க பயன்படுத்த வேண்டும்.

3. உள்ளடக்கம் & பயன்பாடு

கட்டுரைகள், படங்கள், புகைப்படங்கள்,கருத்துகள், மென்பொருள் குறியீடு, ஆடியோ மற்றும் வீடியோ கிளிப்கள், மேலும் பிற உள்ளடக்கங்கள் (சேகரிப்பாக “உள்ளடக்கம்”) போன்றவை எங்கள் தகவல்தொடர்புகளில் உள்ளடங்கும். Mozilla மற்றும் Mozilla திட்டப்பணிகளின் பங்களிப்பாளர்கள், மற்றும் பிற மூலங்களினால்  உள்ளடக்கம் ஆதரிக்கப்பட்டுள்ளது.

Mozilla வழங்கும் உள்ளடக்கம் பொதுவாக பொது பகிர்வில் கிடைக்கும் மற்றும் கிரியேட்டிவ் காமன்ஸ் (விளக்கமான உள்ளடக்கத்திற்கானது) அல்லது Mozilla பொது உரிமம் (மென்பொருள் குறியீட்டிற்கானது) போன்ற ஓப்பன் உரிமங்கள் மூலம் மீண்டும் பயன்படுத்த கிடைக்கிறது.  பெரும்பாலான சமயங்களில், ஓப்பன் உரிமங்களின் கீழ் உள்ளடக்கத்தை வெளியிடவே Mozilla பங்களிப்பாளர்களைக் கேட்டுக்கொள்வோம்.

எங்கள் தொடர்புகளில் உள்ள சில உள்ளடக்கம், சிறப்பு அனுமதி இல்லாமல் அந்த உள்ளடக்கத்தை மேற்கொண்டு பயன்படுத்த தடைசெய்யப்பட்ட மூலங்களிலிருந்து பெறப்பட்டதாகும்.  சாத்தியமான இடங்களில், உள்ளடக்கம் அல்லது இணையதள அடிக்குறிப்பில் பொருந்தும் உரிமத்துடன்கூடிய அறிக்கை தோன்றும். இதுபோன்ற அறிக்கைகளுடனான விதிப்படி இணங்க வேண்டும் என ஒப்புக்கொள்கிறீர்கள்.  பின்வரும் சில குறிப்புகளையும் நினைவில்கொள்ளவும்:

  • சில உள்ளடக்கத்தில் வெளிப்படையாகவே, ஆசிரியர் ஓப்பன் உரிமத்தைப் பயன்படுத்த அனுமதிக்கவில்லை என குறிப்பிடப்பட்டிருக்கும். இதுபோன்ற உள்ளடக்கத்தைப் பயன்படுத்த, ஆசிரியர் அல்லது ஆசிரியரின் ஏஜென்ட்டைத் தொடர்புகொண்டு, அனுமதிப் பெற வேண்டும்.  Mozilla க்குச் சொந்தமான உள்ளடக்கம் குறித்த கேள்விகள் இருப்பின், அதை இந்த முகவரிக்கு அனுப்பவும்: licensing@mozilla.org.
  • சில உள்ளடக்கத்தில் வணிக முத்திரைகள், டிரேட் டிரஸ், Mozilla மற்றும் பிற தரப்பினர்களின் லோகோக்கள் மற்றும் பிராண்டு சொத்துகளும் (“வணிக முத்திரைகள்”) அடங்கும். குறிப்பிட்ட சில சூழல்கள் தவிர, வணிகமுத்திரையின் உரிமையாளர் வழங்கிய எழுத்துப்பூர்வ சிறப்பு அனுமதியின்றி வணிகமுத்திரைகளைப் பயன்படுத்த முடியாது.  Mozilla வணிகமுத்திரைகள் பற்றி மேலும் அறிக.
  • எங்கள் இணையதளங்களால் பயன்படுத்தப்படும் மென்பொருளானது MPL அல்லது அதுபோன்று அனுமதியளிக்கும் ஒப்பன் சோர்ஸ் உரிமங்களின் கீழ் உரிமம் பெற்றது. குறிப்பிட்ட உரிமம் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு,பொருந்தக்கூடிய ஆதாரக் குறியீடு அல்லது GitHub களஞ்சியத்தைப் பார்க்கவும்.

4. உள்ளடக்கச் சமர்ப்பிப்புகள்

எங்கள் தகவல் பரிமாற்றங்களை வைத்து நீங்கள் உரையாடும்போது நீங்கள் உள்ளடக்கச் செயல்பாடுகளில் பங்களிக்கலாம். கட்டுரைகள், வலைப்பதிவுகள், பங்களிப்பு குறியீடு அல்லது பங்களிப்பு வரைகலை அல்லது எழுத்துப்பூர்வமான ஆவணங்களில் (ஒவ்வொரு “சமர்ப்பித்தல்”) கருத்து தெரிவிப்பதற்கு வரம்பிடப்படவில்லை. Mozilla உடன் தனிப்பட்ட ஒப்பந்த்த்தின் கீழ் நீங்கள் சமர்ப்பிக்கவில்லையெனில், ஒப்பந்தமானது கையகப்படுத்தப்படும்

Mozilla இன் ஓப்பன் சோர்ஸ் திட்டங்களின் சமர்ப்பிப்புகளுக்கு:

  • நீங்கள் பங்காற்றும் குறிப்பிட்ட ஓப்பன் சோர்ஸ் திட்டத்திற்கான உரிமத்தின் விதிமுறைகளுக்கு கீழ் உங்கள் சமர்ப்பித்தலுக்கு உரிமம் பெற ஒப்புக்கொள்கிறீர்கள். குறிப்பிட்ட உரிமம் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு,பொருந்தக்கூடிய ஆதாரக் குறியீடு அல்லது GitHub களஞ்சியத்தைப் பார்க்கவும்.

பிற எல்லா சமர்ப்பிப்புகளுக்கும், பின்வரும் ஒவ்வொன்றும் ஒப்பந்தத்துடன் தொடர்புடையது என்பதை ஏற்கிறீர்கள்:

  • உங்கள் சமர்ப்பிப்பு இந்த விதிமுறைகள், Mozilla பயன்பாட்டு நிபந்தனைகள், மற்றும் உங்கள் சமர்ப்பிப்பைக் கட்டுப்படுத்தும் எல்லா கூடுதல் விதிமுறைகள் ஆகியவற்றுடன் இணங்க வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டு உறுதியளிக்கிறீர்கள்.
  • Mozilla இன் நோக்கம், தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தொடர்புகள், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விளம்பரத்துடன் தொடர்புடைய உங்கள் சமர்ப்பிப்பைப் பயன்படுத்த, பகிரப்படாத, ராயல்டி இல்லாத, சர்வதேச மற்றும் துணை உரிமத்தை (நாங்கள் வேலை செய்வதற்கானது) எங்களுக்கு வழங்குகிறீர்கள்.
  • உங்கள் சமர்ப்பிப்புகள் பொருந்தும் சேவையின் பதிவுசெய்த பிற பயனர்கள் அல்லது பொது மக்களால் அணுகக்கூடியதாக இருக்கலாம் என்பதை ஏற்கிறீர்கள்.
  • உங்கள் சமர்ப்பிப்பில் வெளிப்படையான உள்ளடக்கம் அல்லது மென்பொருள் குறியீடு இருந்தால், சமர்ப்பிற்குப் பொருந்தும் குறிப்பிட்ட இணையதளத்துடன் இணங்கும் வகையில் உரிமத்தை ஏற்க வேண்டும்.
  • இங்கு வழங்கிய உரிமைகளை வழங்குவதற்கு தேவைப்படும் எல்லா உரிமைகளும் உங்களிடம் உள்ளன என்பதையும், இந்த விதிமுறைகளுக்கு கீழ் கருதப்பட்டுள்ள பயன்பாடுகள் எந்தவொரு மூன்றாம் தரப்பின் உரிமைசார்ந்த அல்லது அறிவுசார்ந்த சொத்து உரிமங்களை மீறாது என்பதை ஒப்புக்கொண்டு, உத்தரவாதம் அளிக்கிறீர்கள்.
  • சமர்ப்பிப்பானது இந்த விதிமுறைகளுக்கு எதிராக அல்லது மீறுவதாக இருந்தால், Mozilla தனது விருப்பப்படி சமர்ப்பிப்பை மதிப்பாய்வு செய்யவோ, மாற்றவோ அல்லது அகற்றவோ உரிமையுள்ளது என்பதைப் புரிந்துகொண்டு ஏற்கிறீர்கள்.

5. தனியுரிமைக்கொள்கை & குக்கீகள்

Mozilla இணையதளங்கள், தகவல்தொடர்புகள் & குக்கீகள் தனியுரிமை அறிக்கை எங்கள் தகவல்தொடர்புகளுடன் இணைப்பில் உங்களிடமிருந்து பெறப்படும் தகவல்களை எப்படி நாங்கள் கையாளுகின்றோம் என்பதை விளக்குகிறது. தனியுரிமை அறிவிப்பானது, எடுத்துக்காட்டாக, எங்களது இணையதளங்களில் உள்ள சில குக்கீகளை நீங்கள் எப்படி விலக்குவீர்கள் என்பதை விளக்குகிறது.

6. தகவல்தொடர்புகள் மற்றும் நிகழ்வுகள்

எங்களது செய்திமடல்களை பெறுவதற்கு அல்லது எங்கள் இணையதளங்களுடன் இணைந்திருக்கும் கணக்குகளில் பதிவு செய்திருந்தால், எங்களுடன் இணைப்பில் இருக்கும் உங்கள் கணக்கில் எங்களிடமிருந்து பரிமாற்ற மின்னஞ்சல்களை (எடுத்துக்காட்டாக, சட்டப்பூர்வ, தனியுரிமை மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகள் போன்றவை) பெறலாம்.

எங்களின் சில இணையதளங்களில் உள்ள ஆன்லைன் கருவிகள் மற்றவர்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்ப உங்களை அனுமதிக்கும். எடுத்துக்காட்டாக, உங்களின் Webmaker கணக்கினைப் பயன்படுத்தி உங்கள் தொடர்புகளில் உள்ளவர்களை நீங்கள் அழைக்கலாம். மற்றவர்களின் மின்னஞ்சல் முகவரிகளைத் தவறாக பயன்படுத்தமாட்டீர்கள் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் (எடுத்துக்காட்டாக, ஸ்பேம் செய்தல்).

MozReps மற்றும் Webmaker போன்ற பிற இணையதளங்கள், அனைவரும் பங்கேற்பதற்கான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு பயனர்களை அனுமதிப்பதற்கான கருவிகளை வழங்குகிறது. நிகழ்ச்சிகளில் பங்குபெறும் போது, எச்சரிக்கை மற்றும் நல்ல தீர்ப்புகளைக் கடைப்பிடிக்கவும்

7. முறைகேடு புகார்கள்

பதிப்புரிமை அல்லது முத்திரையைத் தவறாக பயன்படுத்துதலை புகாரளிக்கும் முறைகளை பற்றித் தெரிந்துகொள்ள, இங்கு பார்க்கவும்: https://www.mozilla.org/about/legal/report-infringement/.

8. காலவரை; முடிவுறுதல்

இந்த விதிமுறைகள் MOZILLA அல்லது உங்களால் முடிவுக்கு கொண்டு வரும் வரை தொடர்ந்து பயன்படுத்தப்படும். You can choose to end them at any time for any reason by discontinuing your use of our Communications and, if applicable, deleting your account.

எந்த காரணத்திற்காகவும் எந்த நேரத்திலும் எங்கள் தொடர்புகள் தொடர்பான உங்கள் அணுகலைத் இடைநிறுத்தலாம் அல்லது முறித்துக் கொள்ளலாம், வரம்பின்றி இவை உட்பட, நாங்கள் சரியானதாக இவற்றை நம்பினால்: (i) இந்த விதிமுறைகள் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பயன்பாட்டுக் கொள்கை அல்லது பிற தொடர்புடைய கொள்கையை மீறுதல்; (ii) எங்களுக்கு ஆபத்து அல்லது சாத்தியமான சட்ட வெளிப்பாடுகளை உருவாக்கினால்; அல்லது (iii) உங்களுடனான எங்களின் தகவல் தொடர்புகள் வணிக ரீதியாக தொடராமல் இருந்தால்.

இதுபோன்ற சமயங்களில், இந்த விதிமுறைகள் அனைத்திலும் நிறுத்தப்படும், எனினும் பின்வரும் பிரிவுகளில் தொடரும் என்பதைத் தவிர: நஷ்ட ஈடு, மறுதலிப்பு; பொறுப்பிற்கான வரம்பு, மேல்முறையீடு.

9. நஷ்ட ஈடு

உங்களின் சேவைகள் பயன்பாட்டினால் ஏற்படும் அல்லது அதிலிருந்து எழும் வழக்கறிஞர் கட்டணம், எங்களது தகவல் தொடர்புகளை பயன்படுத்துவதால் எழும் கட்டணங்கள் அல்லது தொடர்புடைய கட்டணங்கள் (உங்களின் சமர்ப்பிப்புகளில் இருந்து அல்லது இத்தகைய விதிமுறைகளை மீறுதல்களால் ஏற்படும் கட்டணங்கள் உட்பட, ஆனால் வரம்பில்லை) உட்பட்ட ஏதேனும் அல்லது அனைத்து மூன்றாம் தரப்பினரின் கிளைம்கள் மற்றும் செலவினங்களிலிருந்து Mozilla, அதன் ஒப்பந்ததாரர்கள், பங்களிப்பாளர்கள், உரிமதாரர்கள் மற்றும் கூட்டாளர்கள், மற்றும் அதன் இயக்குனர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் முகவர்கள் ("காப்புறுதி தாரர்கள்") உட்பட்டவர்களை பாதுகாக்க, நஷ்ட ஈடு அளிக்க மற்றும் தீங்கில்லாமல் வைத்துக்கொள்ள ஒப்புக்கொள்கிறீர்கள்.

10. மறுதலிப்பு; பொறுப்பிற்கான வரம்பு

தகவல் தொடர்புகள் அனைத்தும் பிழைகளுடன் "உள்ளபடியே" வழங்கப்படும். சட்டத்தின் வரம்பிற்குட்பட்டு, MOZILLA மற்றும் காப்புறுதி தாரர்களுக்கு, வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ, வரம்பின்றி குறைபாடுகள் அற்ற, வணிகரீதியான, ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கு பொருத்தமான, அறிவுசார் சொத்துகளை மீறாதவரை அனைத்து உத்தரவாதங்களையும் மறுதலிக்கும் உரிமையுள்ளது. உங்கள் நோக்கங்களுக்காக தகவல் தொடர்புகளைப் பயன்படுத்துதல் மற்றும் தகவல் தொடர்புகளின் தரம் மற்றும் உங்கள் வன்பொருள், மென்பொருள் அல்லது உள்ளடக்கத்தை நீக்குதல் அல்லது சிதைத்தல் உள்ளிட்ட செயல்பாடு, எவரேனும் உங்கள் தகவலின் அங்கீகரிக்கப்படாத அணுகலை பெறுதல் அல்லது வேறு பயனர் உங்களது சமர்ப்பிப்புகளை தவறாக பயன்படுத்துதல் அல்லது அபகரித்தல் போன்றவற்றால் ஏற்படும் அனைத்து அபாயங்களையும் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். இந்த வரையறை எந்தத் தீர்வின் அடிப்படை நோக்கம் தோல்வியடைந்த போதிலும் செயல்படுத்தப்படும். சில சட்ட அதிகாரங்கள், உத்தரவாத காப்புறுதிகளின் விலக்கத்தையோ அல்லது வரம்புகளையோ அனுமதிப்பதில்லை, ஆதலால் இந்த கைதுறப்பு உங்களுக்கு பொருந்தாது.

சட்டத்தால் கோரப்பட்டால் தவிர, MOZILLA மற்றும் அதன் காப்புறுதி தரப்பினர் இந்த விதிமுறைகளுக்கு வெளியே அல்லது தொடர்புடையதாக அல்லது தொடர்புகளைப் பயன்படுத்துதல் அல்லது பயன்படுத்த முடியாமல் போதல் ஆகியவற்றால் எழும் எந்த மறைமுக, சிறப்பு, தற்செயலான, விளைவாக அல்லது முன்மாதிரி சேதங்களுக்கு பொறுப்பன்று, இது வரம்பின்றி நற்பெயருக்கு ஊறுவிளைவிக்கும் நேரடி மற்றும் மறைமுக பாதிப்பு, வேலை நிறுத்தம், இலாப இழப்பு, தரவு இழப்பு மற்றும் கணினி தோல்வி அல்லது செயலிழப்பு என அத்தகைய சேதங்களின் சாத்தியக்கூறுகள் பற்றிய ஆலோசனை மற்றும் கோட்பாட்டைப் பொருட்படுத்தாமல் (ஒப்பந்தம், அநீதி அல்லது மற்றபடி) அத்தகைய கோரலிற்கும் கூடப் பொருந்தும். இந்த ஒப்பந்தத்தின் கீழ் MOZILLA மற்றும் காப்புறுதி தரப்புகளின் கூட்டுப் பொறுப்பானது $500 (ஐந்நூறு டாலர்கள்) மிகக் கூடாது. சில சட்ட வரம்புகள், தவிர்ப்பு அல்லது தற்செயலின் வரம்பு, விளைவுகள் அல்லது சிறப்பு பாதிப்புகளை அனுமதிப்பதில்லை, எனவே இந்தத் தவிர்ப்பு மற்றும் வரையறை உங்களுக்குப் பொருந்தாது.

11. இந்த விதிமுறைகளின் திருத்தங்கள்

Mozilla சேவைகளில் ஒரு புதிய அம்சத்தைக் குறிப்பிடும் போதோ அல்லது ஒரு நிபந்தனையை தெளிவுபடுத்த வேண்டியோ இந்த விதிமுறைகளை அவ்வப்போது புதுப்பிக்கலாம். புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகள் ஆன்லைனில் வெளியிடப்படும். முக்கியமான மாற்றங்கள் என்றால், இடுகைகள் மற்றும் மன்றங்கள் போன்ற Mozilla அறிவிப்புகளின் வழக்கமான சேனல்கள் மூலம் புதுப்பிப்பைப் பற்றி அறிவிப்போம். அத்தகைய மாற்றங்களை அமல்படுத்திய தேதிக்கு பின்னர் நீங்கள் தொடர்ந்து சேவைகளைப் பயன்படுத்துவது மாற்றங்களை நீங்கள் ஏற்றுக்கொண்டதாகக் கொள்ளப்படும். உங்கள் வசதிக்காக, இந்தப் பக்கத்தின் மேல் பகுதியில் அமலாகும் தேதியை இடுகையிடுவோம்.

12. மேல்முறையீடு

இந்த விதிமுறைகளானது தகவல் தொடர்புகள் மற்றும் விதிமுறைகளின் ஏதேனும் முந்தைய பதிப்புகளிலிருந்து விலக்களிப்பது தொடர்பான உங்களுக்கும், Mozillaக்கும் இடையேயான ஒப்பந்தத்தை உள்ளடக்கியுள்ளது. தகவல் தொடர்புகள் ,மற்றும் இந்த விதிமுறைகள் யாவும், அதன் சட்ட வழங்கல் முரண்பாடுகள் தவிர்த்து அமெரிக்க கலிபோர்னியா மாகாணச் சட்டங்கள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. தகவல் தொடர்புகள் அல்லது இந்த விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு எழும் அனைத்து கிளைம்கள் மற்றும் சர்ச்சைகள் பிரத்யேகமாக கலிபோர்னியாவில் உள்ள சான்டா கிளாரா கவுண்டி நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லப்படும் மற்றும் இந்த நீதிமன்றங்களில் தனிப்பட்ட விசாரணை மேற்கொள்வதற்கு சம்மதிக்கிறீர்கள். இந்த விதிமுறைகளின் எந்த பகுதியும் தவறாக அல்லது நடைமுறைப்படுத்த முடியாததாக இருப்பின், மீதமுள்ள பகுதிகள் அனைத்தும் முழு அமலில் இருக்கும். இந்த வகையில், ஆங்கில மொழி பதிப்பிற்கும் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பிற்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டால், ஆங்கில மொழி பதிப்பே கட்டுப்படுத்தும். In the event of a conflict between these Terms and relevant additional terms, the additional terms shall control.

13. எங்களைத் தொடர்புகொள்ள

Mozilla
Attn: Mozilla – Legal Notices
149 New Montgomery Street
4th Floor
San Francisco, CA 94105
USA
தொலைபேசி: 650-903-0800
தொலைநகல்: 650-903-0875
Legal-notices at mozilla.com