திரும்பிப் பார்க்கிறோம். முன்னேறுகிறோம்.

இணையத்தில் வெளிப்படைத்தன்மை, புதுமை மற்றும் வாய்ப்பு ஆகியவற்றை மேம்படுத்தவே Mozilla உள்ளது.
எங்களின் சில உயரிய சாதனைகளையும் மையில்கற்களையும் சற்று உற்று நோக்கினாலே நாங்கள் யாறென்று புரியும்.

 • 01

  Mozilla திட்டப்பணி மார்ச் 31, 1998 அன்று Netscape இல் தொடங்கப்பட்டது, அது இணையத்தில் பயனர்களுக்கு தெரிவுகளை வழங்கவும் புதுமையை ஊக்குவிக்கவும் தொடங்கப்பட்ட.

 • 02

  பெருமிதம் கொள்ளும் வகையில் இலாப நோக்கற்ற Mozilla நிறுவனம் எங்கும் உள்ள பயனர்களது கைகளுக்குள் இணையத்தின் சக்தியைக் கொண்டுவரும் நோக்கத்தோடு Firefox போன்ற தயாரிப்புகளை உருவாக்குகிறது.

 • 03

  2004 இல் Firefox 1.0 அறிமுகப்படுத்தப்பட்ட போது, The New York Times இதழில் எங்கள் முழுப்பக்க விளம்பரத்திற்காக நிதி உதவி செய்வதன் மூலம் 10,000 க்கும் அதிகமான பங்களிப்பாளர்கள் எங்கள் நோக்கத்திற்கான தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

 • 04

  இன்று Mozilla வின் பங்களிப்பாளர்கள் (80% மக்கள் Firefox ஐப் பயன்படுத்தும்) அன்டார்க்டிக்கா உட்பட உலக கண்டங்கள் அனைத்திலும் உள்ளனர்.

 • 05

  பயர்பாக்சு துணை நிரல்கள் உங்கள் இணைய அனுபவத்தை தனிப்பயனாக்கவும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் உதவுகின்றன. பயனர்கள் இதுவரை நாநுாறு கோடிக்கும் அதிகமான துணை நிரல்களைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

 • 06

  மொசில்லா பயனர்களுக்கு தங்கள் தனிப்பட்ட தரவு மீதான சிறந்த கட்டுப்பாட்டை வழங்குகின்ற தடமறிதல் மறுப்பு ஒப்பந்தம் மற்றும் லைட்பீம் போன்ற உலாவியின் புதுமைகளைக் கொண்டு இன்று இணைய தனியுரிமைப் பாதையில் முன்னணியில் உள்ளது.

 • 07

  எங்கள் உலக சமூகத்தினர் Firefox ஐ 70 க்கும் மேலான மொழிகளில் மொழிபெயர்த்து உலகின் 90% க்கும் அதிகமான மக்களுக்கு உலாவியைக் கிடைக்கச் செய்துள்ளனர்.

 • 08

  2008 இல், ஒரே நாளில் 8,002,530 பேர் Firefox ஐத் தேர்வு செய்தது, “24 மணி நேரத்தில் ஒரு மென்பொருள் பயன்பாட்டின் அதிகபட்ச பதிவிறக்கமாக” கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றது

 • 09

  Mozilla ஃபெஸ்ட்டிவல் என்னும் எங்கள் மிகப் பெரிய ஆண்டு நிகழ்வு படைப்புத்திறன் கொண்ட நூற்றுக்கணக்கான மக்களை ஒருங்கிணைத்து இணையத்தின் முழு சக்தியையும் ஆற்றலையும் உணரச் செய்யும் ஒரு நிகழ்வாக உள்ளது.

 • 10

  Mozilla இணைய உருவாக்கி திட்டப்பணி இணையம் பற்றிய அறிவு நிறைந்த ஓர் உலகத்தை உருவாக்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது, அது மக்கள் தங்கள் இணைய வாழ்க்கையின் பெரும் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கு உதவும் கருவிகளையும் திட்டப்பணிகளையும் வழங்குகிறது.

 • 11

  பயர்பாக்ஸ் உலாவி கணினிக்கு சமமான உலாவல் அனுபவத்தை ஆண்ட்ராய்டு தள பேசிகளிலும் பலகைப்பேசிகளிலும் உள்ள பயர்பாக்ஸ் தருகிறது. இச்செயலி எந்நுாறு இலட்சத்திற்கும் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டு கூகுள் கடையில் கிடைக்கிறது.

 • 12

  Mozilla உருவாக்குநர் பிணையம் என்பது ஒவ்வொரு மாதமும் 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களுக்கு சிறந்த ஆவணமாக்கத்தையும் கற்பித்தல் வழிகாட்டிகளையும் கருவிகளையும் கிடைக்கச் செய்யும், சமூகத்தால் நடத்தப்படுகின்ற ஒரு இணைய வளமாகும்.

 • 13

  இணையத்தை அனைவரின் நன்மைக்காகவுமான பகிரப்பட்ட பொது வளமாக பாதுகாக்கவும் பராமரிக்கவும் Mozilla பணியாற்றுகிறது.

 • 14

  2013 ஆம் ஆண்டில் திறன்பேசிகளின் மூலம் இணையத்தின் முழு சக்தியை வெளிப்படுத்தவும் எப்போதும் போல் இணையத்தை நாடி வரும் புதிய தலைமுறையினருக்கு அதன் கட்டுப்பாட்டுகளையும் தெரிவுகளையும் கிடைக்கச்செய்ய மொசில்லா நிறுவனம் பயர்பாக்ஸ் இயங்குதளத்தை (Firefox OS) அறிமுகப்படுத்தியது.

 • 15

  மொசில்லாவின் பணி சாத்தியமானதற்கு ஆயிரக்கணக்கான நன்கொடையாளர்களுக்கும் தன்னார்வப் பங்களிப்பாளர்களுக்கும் நன்றி உறித்தாக்குகிறோம், அவர்கள் உங்களைப் போலவே இணையம் வெளிப்படையாக அனைவரும் அணுகும்படி இருக்க வேண்டுமென்ற ஒற்றை கருத்தைக் கொண்டவர்களே.