Firefox

புவியிருப்பிட-விழிப்புணர்வு உலாவல்

பயர்பாக்ஸில் நீங்கள் இணைய தளங்களில் எங்கே உள்ளீர்கள் என்பதை சொல்லக் கூடியதாக இருக்கும். எனவே உங்களால் மிகவும் பொருத்தமான மற்றும் மிகவும் பயனுள்ள தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். இணைய உலாவுதலை திறனாக்குவதற்கும் – மற்றும் முழுதாக உங்களுடைய தனிப்பட்ட விஷயங்களை காக்கவும் செய்யப்பட்டுள்ளது. முயற்சியுங்கள்!

அடிக்கடி எழும் வினாக்கள்

புவியிருப்பிட-விழிப்புணர்வு உலாவல் என்றால் என்ன?

இருப்பிட விழிப்புணர்வு உலாவுதலைப் பயன்படுத்தும் இணையதளங்கள், அதிக தொடர்புடைய தகவல்களை உங்களுக்கு கொண்டுவர அல்லது தேடும் போது நேரத்தை சேமிக்க நீங்கள் எங்கே உள்ளீர்கள் எனக் கேட்கும். அதாவது உங்கள் இடத்தில் உள்ள பிட்சா உணவகம் ஒன்றை நீங்கள் தேடுகிறீர்கள். உங்களுடைய இடத்தைப் பகிர்வதற்கு இணையத்தளத்தினால் கேட்கக்கூடியதாக இருக்கும். ஆகவே உங்களுக்குத் தேவையான “பிட்சா”விற்கான விடையை இது உங்களுக்குக் கொண்டுவரும்... மேலும் தகவல்கள் அல்லது தட்டச்சோ தேவைப்படாது.

அல்லது, ஏதாவது இடத்தைத் தெரிய நீங்கள் திசைகளை வரைந்தால், நீங்கள் எங்கிருந்து ஆரம்பிக்கிறீர்கள் என்பது இணையத் தளத்திற்கு தெரிய வரும். ஆகவே நீங்கள் செய்ய வேண்டியது எங்கே போக வேண்டும் எனச் சொல்ல வேண்டும்.

இந்த சேவை முழுவதும் விருப்பத்திற்குரியது – உங்களுடைய அனுமதியில்லாமல் பயர்பாக்ஸ் உங்களுடைய இடத்தைப் பகிர்ந்து கொள்ளாது – அத்துடன் உங்களுடைய தனிப்பட்டவற்றை மதிக்க செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பயர்பாக்ஸின் கூறுகளைப் போன்றே இணைய வல்லுனர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு இதிலும் திறந்த தரப்படுத்தல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இது எப்படி வேலை செய்கிறது?

இருப்பிட விழிப்புணர்வு இணையத்தளம் ஒன்றைப் பார்வையிடும் போது, உங்களுடைய இடத்தை நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பினால், பயர்பாக்ஸ் உங்களைக் கேட்கும்.

நீங்கள் அனுமதித்தால்,உங்களுடைய கணினியின் IP முகவரி மற்றும் உங்களுக்கு அருகிலுள்ள வயர்லெஸ் அணுகல் புள்ளிகளை பற்றிய தகவல்களை பயர்பாக்ஸ் சேகரிக்கும். பின்னர் பயர்பாக்ஸ் முன்னிருப்பு இருப்பிட சேவை வழங்குநர், கூகுள் இருப்பிட சேவைகளுக்கு உங்களுடைய இடத்தின் மதிப்பீட்டைப் பெற்றுக் கொள்ள இந்த தகவலை அனுப்பும். அந்த இட மதிப்பீடு கோரப்படும் இணையதளத்துடன் பகிரப்படும்.

நீங்கள் அனுமதிக்கவில்லை என்றால், பயர்பாக்ஸ் எதுவும் செய்யாது.

இடங்கள் எவ்வளவு சரியானவையாக இருக்கும்?

இடத்திற்கு இடம் சரியான நுட்பம் மாறுபடும். சில இடங்களில், குறைந்த மீட்டருக்குள் எங்கள் சேவை வழங்குநர்கள் இடத்தை வழங்கக்கூடியதாக இருக்கும். எப்படியிருந்தாலும், வேறு இடங்களில் இது அதை விடக்கூடுதலாக இருக்கும். எங்களுடைய சேவை வழங்குனரால் கொடுக்கப்பட்ட எல்லா இடங்களும் மதிப்பீட்டளவிலானவை, வழங்கப்பட்ட இடங்களின் சரிநுட்பம் பற்றி உத்தரவாதம் அளிப்பதில்லை. அவசரப்பட்டு இந்த தகவலைப் பயன்படுத்த வேண்டாம். எப்போதும் அறிவைப் பயன்படுத்தவும்.

என்ன தகவல் அனுப்பப்பட்டது? யாருக்கு? என் தனிப்பட்ட விஷயங்கள் பாதுகாப்பானதா?

உங்களுடைய தனிப்பட்ட விஷயங்கள் எங்களுக்கு மிகவும் முக்கியமானதுடன், பயர்பாக்ஸ் உங்களுடைய அனுமதியில்லாமல் இடத்தை ஒருபோதும் பகிரமாட்டாது. நீங்கள் பார்வையிடும் பக்கம் உங்களுடைய தகவல்களை கேட்கும்போது, தகவல்களை இணையதளத்துடனும் எங்கள் மூன்றாம் நபர் சேவை வழங்குநருடனும் பகிர்வதற்கு முன் உங்களிடம் கேட்கப்படும்.

முன்னிருப்பாக, அனுப்புவதன் மூலம் உங்களுடைய இடத்தைத் தீர்மானிப்பதற்கு பயர்பாக்ஸ், கூகுள் இருப்பிட சேவையைப் பயன்படுத்துகிறது:

  • உங்கள் கணினியின் IP முகவரி,
  • அருகில் காணப்படும் வயர்லெஸ் அணுகல் புள்ளிகள் பற்றி தகவல், மற்றும்
  • கூகுளால் ஒதுக்கப்பட்ட குறிப்பில்லா கிளையன் அடையாளப்படுத்தி, இது ஒவ்வொரு 2 வாரங்களுக்கும் காலாவதியாகும்.

பயர்பாக்ஸால் தகவல் சேகரிக்கப்படுதல் மற்றும் பயன்படுத்தப்படுதல் போன்ற மேலும் விவரங்களுக்கு, இதைப் பார்க்கவும் பயர்பாக்ஸ் தனியுரிமை கொள்கை.

கூகுளின் இருப்பிட சேவைகள் உங்கள் மதிப்பீட்டு இருப்பிடத்தை கொடுக்கும் (எ.கா, அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை). கூகுளால் தகவல் சேகரிக்கப்படுதல் மற்றும் பயன்படுத்தப்படுதல் போன்ற மேலும் விவரங்களுக்கு, இதைப் பார்க்கவும் கூகுள் புவியிருப்பிட தனியுரிமை கொள்கை.

உங்களின் தனிப்பட்ட விஷயங்களை பாதுகாக்க மறைகுறியீடாக இணைப்பில் தகவல் பரிமாற்றப்படுகிறது. ஒரு முறை பயர்பாக்ஸ் உங்களுடைய இட தகவலை வைத்திருந்தால், இது கோரப்பட்ட இணையதளத்திற்கு இதை அனுப்பும். எந்த ஒரு நேரத்திலும் பெயரோ அல்லது நாம் செல்லும் இணையத்தளத்தின் முகவரியோ, அல்லது ஏதாவது குக்கிஸ் போன்றனவோ கூகுள் இருப்பிட சேவைகளுடன் பகிரப்படமாட்டாது.

அடையாளப்படுத்த கூகுள் இருப்பிட சேவைகளால் சேகரிக்கப்பட்ட தகவலை மொசில்லா அல்லது கூகுள் எப்போதாவது பயன்படுத்தும்.

உங்களுடைய இடத் தகவலுடன் கோரப்படும் இணையத்தளம் என்ன செய்துள்ளது என்ற தகவல்களுக்காக, இணையத்தளங்களின் தனிப்பட்ட கொள்கையைப் பார்க்கவும்.

உங்களுடைய தனிப்பட்ட விஷயங்கள் பற்றிய மேலும் தகவல்களுக்கு, நீங்கள் கட்டாயமாக வாசிக்க வேண்டியது:

இணையத்தில் உலாவரும்போது எனது செயல்பாடுகள் பதிவு செய்யப்படுமா?

இல்லை. இணையத் தளம் விண்ணப்பம் ஒன்றை உருவாக்கும் போது, பயர்பாக்ஸ் இடமொன்றைக் கோரும். விண்ணப்பத்தை பயனர் உறுதிப்படுத்திய பின்னரே உங்களின் இடத்தைப் பகிரும். உலாவலில் பயர்பாக்ஸ் உங்கள் இடத்தை நினைவில் வைத்துக் கொள்ளாது.

தளம் ஒன்றிற்கு வழங்கப்பட்ட அனுமதியை எவ்வாறு நான் மறைப்பது?

உங்கள் இடத்தை எப்போதும் கொடுக்கவும் என்பதை தேர்ந்தெடுத்து, பின்னர் உங்கள் மனதை மாற்றிக்கொண்டால், நீங்கள் இதனை எளிதாக மாற்றிக்கொள்ளலாம். அதுபற்றி இங்கே காண்க:

  • நீங்கள் அனுமதி வழங்கிய தளத்தில் நகரவும்
  • கருவிகள் மெனுவுக்கு சென்று, பக்க தகவல் என்பதை தேர்ந்தெடுக்கவும்
  • அனுமதிகள் கீற்றைத் தேர்ந்தெடுக்கவும்
  • இடத்தைப் பகிர்தல் என்பதற்கான அமைவை மாற்றவும்

இருப்பிட விழிப்புணர்வு உலாவுதலை எவ்வாறு நான் நிரந்தரமாக நிறுத்துவது?

பயர்பாக்ஸில் இருப்பிட விழிப்புணர்வு உலாவுதல் எப்போதும் opt-in ஆகும். எந்தவொரு இட தகவலும் உங்களின் அனுமதியில்லாமல் அனுப்புப்படமாட்டாது. நீங்கள் இந்த வசதியை செயல்நீக்க, இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:

  • URL பட்டையில், about:config என தட்டச்சு செய்யவும்
  • geo.enabled என தட்டச்சு செய்
  • geo.enabled விருப்பம் மீது இருமுறை சொடுக்கவும்
  • இட விழிப்புணர்வு உலாவல் இப்போது செயல்நீக்கப்பட்டுள்ளது

நான் எனது வலைத்தளத்தில் புவியிருப்பிட ஆதரவை இணைப்பது எப்படி?

மொசில்லா உருவாக்குநர் மையத்தில் உள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுவதன் மூலம் உங்கள் சேவைகளில் புவியிடத்திற்கான ஆதரவை ஒன்றிணைக்க முடியும்.