உள்ளடக்கம் & சேவைகள் ஃபீட்சர்ஸ் மிஷன் டெய்லி உள்நுழைவிற்கான ரிவார்ட்

எங்கள் புதிய உள்ளடக்கம் &சேவை அம்சங்களை ஒவ்வொரு நாளும் Firefox Lite ஐ மட்டுமே பயன்படுத்தும் பயனர்களை நாங்கள் தேடுகிறோம். இந்த ஆவணம் மிஷனுக்கான விதிகளை வகுக்கிறது.

மிஷன்

 • முதலில், “ஏற்கிறேன்” என்பதைக் கிளிக் செய்து, இந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்வதன் மூலம் மிஷனை ஏற்றுக்கொள்ளுங்கள்.
 • தொடர்ந்து 7 நாட்களுக்கு Firefox Lite இன் புதிய உள்ளடக்கம் & சேவை அம்சங்களைப் பயன்படுத்தவும். Firefox Lite இதைத் தொடர்ந்து கண்காணித்து வரும்.
 • நீங்கள் தொடர்ச்சியாக 7 நாட்கள் உள்ளடக்கம் & சேவை அம்சங்களைப் பயன்படுத்துவதை முடித்தவுடன், மிஷன் பக்கத்திற்குத் திரும்பி, ஒரு பரிசு அட்டை / இ-வவுச்சரை மீட்டெடுக்க உங்கள் Firefox கணக்கில் பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்.
 • மிஷன் காலம். நவம்பர் 1, 2019 தொடங்கி ஜனவரி 31, 2020 வரை மிஷன் காலமாகும். அனைத்துப் பதிவுகளும் டிசம்பர் 31, 2019க்குள் முடிவடைய வேண்டும். அனைத்து ரிவார்டுகளும் ஜனவரி 31, 2020 க்குள் மீட்கப்படவேண்டும் இல்லையெனில், அவை காலாவதியாகிவிடும்.
 • எவ்வாறு பங்கேற்பது என்பதைப் புரிந்துகொள்ள உதவி வேண்டுமா? எங்கள் விவரப் பக்கத்தை பாருங்கள்!

தகுதி

 • நவம்பர் 1, 2019 முதல் ஜனவரி 24, 2020க்குள் Firefox Lite ஐ நிறுவும் அல்லது புதுப்பிக்கும் பயனர்கள் இந்த 7 நாள் மிஷனிற்குத் தகுதிபெறுவர்.
 • பங்கேற்பாளர்கள் வசிக்கும் அதிகார வரம்பில், அவர்கள் மேஜராகவாவது இருக்க வேண்டும்.
 • Mozilla Corporation மற்றும் அதன் முதன்மை மற்றும் இணை நிறுவனங்களின் ஊழியர்களும், அவர்களின்நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் (மனைவி, பெற்றோர், உடன்பிறப்புகள் மற்றும் குழந்தைகள்) மற்றும் அத்தகைய ஊழியரின் இதரக் குடும்ப உறுப்பினர்களும் இதில் பங்கு கொள்வதற்குத் தகுதியற்றவர்கள்.
 • மிஷனில் பங்கேற்க நீங்கள் ஒரு Firefox கணக்கை மட்டுமே பயன்படுத்தலாம். மிஷனில் பங்கேற்க பல கணக்குகளைப் பயன்படுத்துவது, உங்கள் பங்கேற்பைச் செல்லுபடியாகாததாக மாற்றி விடும். மேலும் விதிமீருபவர்களை எதிர்கால ரிவார்ட் மிஷன்களில் பங்கேற்பதிலிருந்து நாங்கள் தடைசெய்யலாம். மிஷனின் போது உங்கள் Firefox கணக்கிலிருந்து வெளியேறினால், தொடர்ச்சியாக 7 நாட்களுக்கான உங்களின் முன்னேற்றத்தை இழப்பீர்கள். எனவே, நீங்கள் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்க வேண்டியிருக்கும்.
 • ஒவ்வொரு நபரும் ஒரு ரிவார்ட்டை மட்டுமே பெறத் தகுதியுடையவர்கள். ஒரே மிஷனில் நீங்கள் பல முறை பங்கேற்கக்கூடாது.
 • ஸ்பான்சர் மற்றும் அதன் முதன்மை மற்றும் இணை நிறுவனங்களின் பணியாளர்களுடன்அவர்களின் நெருங்கிய குடும்பத்தினர் (மனைவி, பெற்றோர், உடன்பிறப்புகள் மற்றும் குழந்தைகள்) மற்றும் அத்தகைய ஊழியரின் இதரக் குடும்ப உறுப்பினர்களும் இதற்குத் தகுதி பெற மாட்டார்கள்.
 • அமெரிக்காவின் தடைப் பட்டியலில் நீங்களோ அமெரிக்காவின் தடைப் பட்டியலில் உங்கள் நாடோ (எ.கா. கியூபா, ஈரான், வாடா கொரியா, சூடான் மற்றும் சிரியா) இடம்பெற்றிருக்கக் கூடாது.
 • தடைசெய்யப்பட்டிருக்கும் மற்றும் பதிவு செய்ய,ஒப்பந்தம் செய்ய அல்லது உள்ளூர்மயமாக்கல் செய்யத் தேவைப்படும் இடங்களில் செல்லுபடியாகாது.

தனியுரிமை

Firefox Lite இன் தனியுரிமை குறித்த அறிவிப்பு இந்த மிஷனில் நீங்கள் பங்கேற்கும்போது நாங்கள் சேகரிக்கும் தகவல்கள் மற்றும் அவை எவ்வாறு கையாளப்படுகின்றன மற்றும் பகிரப்படுகின்றன என்பவற்றை விளக்குகிறது.

பரிசை நான் எங்கே மீட்டெடுக்க முடியும்?

 • நீங்கள் தொடர்ந்து 7 நாள் மிஷனை முடித்துவிட்டீர்கள் மற்றும் பரிசு அட்டை / இ-வவுச்சரை மீட்டெடுக்கத் தகுதியுடையவர்கள் என்பதை உறுதிப்படுத்த உங்கள் மிஷன் வரலாற்றைச் சரிபார்க்கவும். உங்கள் சவால் வரலாறு ஒவ்வொரு நாளிற்குப் பிறகும் காண்பிக்கப்படும். தேவைப்பட்டால், நீங்கள் கேட்பதற்கு https://qsurvey.mozilla.com/s3/Firefox-Lite-Reward-Help ஐ அணுகலாம்!
 • பரிசு அட்டை / இ-வவுச்சரைப் பெற, ரெடீம் பொத்தானை அழுத்தவும். மேலும் அறிக இங்கே.

இந்தப் பரிசை எவ்வாறு பயன்படுத்துவது?

 • Shopee உடனான வாங்குதல்களுக்கு மட்டுமே இந்த வவுச்சரானது சில வரைமுறைகளுடன் பொருந்தும்.
 • வவுச்சர் வழங்குநரால் ஆதரிக்கப்படும் ஷிப்பிங் சேவைகள் பயன்படுத்தி செய்யப்படும் வாங்குதல்களுக்கு இது செல்லுபடியாகும்.
 • பயன்படுத்துவதற்கு முன்னர், பரிசு அட்டை/இ-வவுச்சரைக் கவனமாகப் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் படிக்கவும்.

பொறுப்புத்துறப்பு, வெளியீடு மற்றும் பொறுப்பு வரம்பு

MOZILLA CORPORATION, எந்தவொரு பரிசு அல்லது விளம்பரத்தில் உங்கள் பங்களிப்பு போன்றவற்றைக் குறித்து, எந்தவொரு வகையிலும் எந்தவொரு வெளிப்பாட்டையோ அல்லது உத்தரவாதங்களையோ அளிக்கவில்லை, வெளிப்படுத்தியதும் இல்லை அல்லது செயல்படுத்தியதும் இல்லை. எந்தவொரு பரிசின் விளம்பரத்தில் அல்லது பெறுதலில் பங்கு கொள்வதன் மூலம், ஒவ்வொரு பங்கேற்பாளரும், சிக்கலற்ற ஸ்பான்சர்மற்றும் அதன் சந்தாக்கள், துணை நிறுவனங்கள், சப்ளையர்கள், விநியோகஸ்தர்கள், விளம்பரதாரர்கள்/விளம்பரதார ஏஜென்சிகள், கூட்டளர்கள் மற்றும் பரிசு விநியோகஸ்தர்கள் மற்றும் அவர்கள் ஒவ்வொருவரின் முதன்மை நிறுவனங்கள் மற்றும் அந்தநிறுவனத்தின் அலுவலர்கள், இயக்குநர்கள், பணியாளர்கள் மற்றும் ஏஜெண்ட்கள் (கூட்டாக, “வெளியிடப்பட்ட நபர்கள்”) ஆகியோர் இதிலிருந்து அல்லது இதற்கு எதிரான எந்தவொரு கிளைம் அல்லது நடவடிக்கைக்கும் உள்ளடங்கிய ஆனால் வரம்புக்குட்படாத வகையில், தனிப்பட்ட காயம், இறப்பு, அல்லது சொத்து பாதிப்பு அல்லது இழப்பு, போன்ற பரிசு சம்பந்தமான ஊக்குவிப்பு அல்லது பெறுதல் அல்லது எந்தவொரு பரிசையும் பயன்படுத்துதல் அல்லது தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் விளைவுகளை வெளியிடவும், பின்பற்றவும் ஒப்புக் கொள்கிறார். வெளியிடப்பட்ட நபர்கள் பின்வருபவற்றிற்குப் பொறுப்பாக மாட்டார்கள்: (1) பங்கேற்பாளர்களால் உண்டாக்கப்பட்ட எந்தவொரு தவறான அல்லது துல்லியமில்லாத தகவல்களும், அச்சிடுவதில் ஏற்படும் பிழைகள் அல்லது எந்தவொரு சாதனத்தினாலும் அல்லது விளம்பரத்தோடு தொடர்புடைய அல்லது பயன்பாட்டிற்குல்ளான ப்ரோகிராமிங் போன்றவை; (2) எந்தவொரு வகையிலும் ஏற்படும் தொழில்நுட்பத் தோல்விகள், செயலிழப்பை உள்ளடக்கி, ஆனால் அதோடு மட்டுமல்லாமல், குறைபாடுகள், குறுக்கீடுகள், அல்லது தொலைபேசி லைன்கள் அல்லது இணைய வன்பொருள் அல்லது மென்பொருள் ஆகியவை தொடர்பிழத்தல் போன்றவை; (3) நுழைவு செயல்முறை அல்லது விளம்பரத்தின் எந்தப் பகுதியிலும் அங்கீகரிக்கப்படாத மனிதத் தலையீடு; (4) விளம்பர நிர்வாகம் அல்லது உள்நுழைவு மேம்படுத்துதல் போன்றவற்றில் ஏற்படும் தொழில்நுட்பத்தின் அல்லது மனிதப் பிழை; அல்லது (5) எந்தவொரு காயமோ அல்லது நபர்களுக்கோ அல்லது சொத்துக்களுக்கோ, முழுவதுமாக அல்லது பகுதியாக, பங்கேற்பாளர்களின் விளம்பரப் பங்களிப்பிலிருந்து, அல்லது எந்தப் பரிசையும் பெறுதல் அல்லது பயன்படுத்துதல் அல்லது தவறாகப் பயன்படுத்துதல் காரணமாக நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏற்படக்கூடிய பாதிப்பு.

யாராவது ஏமாற்றினால், அல்லது ஒரு வைரஸ், பிழை, போட், பேரழிவு நிகழ்வு அல்லது வேறு ஏதேனும் முன்னறிவிப்பற்ற அல்லது எதிர்பாராத நடவடிக்கை அல்லது நிகழ்வு இந்த மிஷனின் நேர்மை மற்றும் / அல்லது ஒருமைப்பாட்டை பாதிக்கிறது என்றால், இந்த மிஷனை ரத்து செய்ய, மாற்ற அல்லது இடைநிறுத்தம் செய்வதற்கான உரிமையை Mozilla Corporation கொண்டுள்ளது.நிகழ்வுவானது மனித அல்லது தொழில்நுட்பப் பிழையின் காரணமாக இருக்கும் பட்சத்தில் இந்த உரிமை ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்ட ஆளுகை மற்றும் சர்ச்சைகள்

இந்த உத்தியோகப்பூர்வ விதிகள் மற்றும் விளம்பரங்கள் ஆகியவை கலிஃபோர்னியா மாகாணத்தின் சட்டங்களுக்கு ஏற்றதாக உருவாக்கப்பட்டு, அவைகளால் நிர்வகிக்கப்படுகின்றன. மேலும் இதில் ஏற்படும் எந்தவொரு சிக்கல்களுக்குமான அதிகாரப்பூர்வ விதிகளுக்கு உட்பட்ட மன்றம் மற்றும் இடம் கலிஃபோர்னியாவின் சாண்டா கிளாரா கவுண்டி ஆகும் இந்த சர்ச்சை அல்லது கிளைம் நேரடியான அல்லது மறைமுக விவாதங்கள் கொண்டு தீர்க்கப்படவில்லை என்றால், அது JUDICIAL ARBITRATION AND MEDIATION SERVICES, INC., இன் இறுதியான மற்றும் ஒப்புதல் முறையீட்டால், அதன் ஸ்ட்ரீம்லைன் முறையீட்டு விதிகள் மற்றும் செயல்முறைகள் அல்லது அதன் பின் வெளிவந்த பதிப்புகள் ("JAMS விதிகள்") மூலம் நிர்வகிக்கப்படும். நடுவரைத் தேர்ந்தெடுக்கையில், அவர் கலிஃபோர்னியாவின் சட்ட அமைப்புகளில் அனுபவம் மிக்கவராகவும் சட்டப் பயிற்சிக்கான உரிமத்தையும் பெற்றிருந்தாலே தவிர, JAMS விதிகள் பின்பற்றப்படும்.எந்தவொரு சர்ச்சையோ கிளைமோ ஒரு தனிப்பட்ட அடிப்படையிலேயே தொகுக்கப்படும். மேலும் வேறு எந்த தரப்பினருடனும் எந்தவொரு கிளைம் அல்லது சர்ச்சை முறையீடு தொகுக்கப்படாது. இந்தப் பத்தியின் செயல்முறையில் தொடரப்படும் அனைத்தும் கலிஃபோர்னியாவின் சாண்டா கிளாரா கவுண்டியில் நடைமுறைப் படுத்தப்படும். எந்தவொரு கிளைமிற்கான தீர்வு உண்மையான சேதங்களுக்கு வரம்பிடப்பட்டது. எந்த ஒரு கிளைமிற்கான தீர்வும், உண்மையான சேதங்களுக்கு வரையறுக்கப்பட்டது மற்றும் எந்த நிலையிலும் தண்டனைக்குரிய, முன்மாதிரியான, விளைவுடைய அல்லது வழக்குரைஞருக்கான கட்டணம் போன்ற நிகழ்வு ரீதியான சேதங்கள் அல்லது கிளைம்களை எழுப்புவது தொடர்பான இதுபோன்ற இதரச் செலவுகள் அல்லது இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வது அல்லது தடை அல்லது அதற்குச் சமமான நிவாரணத்தைத் தேடுவது போன்றவற்றிற்கு வரையறுக்கப்பட்டது. MOZILLA CORPORATION இன் மொத்த பொறுப்பின் கீழ், அதில் இருந்து அல்லது இந்த ஒப்பந்தம் தொடர்பாக வரும் தொகையானது, மிஷனில் வெற்றி பெறும் ஒரு ஒற்றைப் பங்கேற்பாளருக்கு அளிக்கப்படும் மொத்த பரிசுத் தொகையை விட அதிகமாக இருக்கக் கூடாது.

கேள்விகள் உள்ளனவா? எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.