Firefox Lite இணைய-அடிப்படையிலான தகவல் சேவைகள்

கீழே விவரிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் படி, Lite இன் இந்த பைனரி பதிப்பில் உங்கள் பயன்பாட்டிற்காக சில அம்சங்களை வழங்க Firefox Lite, இணைய அடிப்படையிலான தகவல் சேவைகளைப் (“சேவைகள்”) பயன்படுத்துகிறது.

  1. Mozilla மற்றும் அதன் பங்களிப்பாளர்கள், உரிமவழங்குநர்கள் மற்றும் கூட்டாளர்கள் மிகவும் துல்லியமான மற்றும் புதுப்பித்த சேவைகளை வழங்குவதற்காகப் பணிபுரிகிறார்கள். இருப்பினும், இந்தத் தகவலானது, விரிவானது மற்றும் பிழை இல்லாதது என்பதற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது. எடுத்துக்காட்டாக, ஷாப்பிங் தகவல் மாற்றப்பட்ட அல்லது காலாவதியான உருப்படிகளை பட்டியலிட்டிருக்கலாம்.

  2. Mozilla தனது விருப்பப்படி சேவைகளை நிறுத்தலாம் அல்லது மாற்றலாம்.

  3. இதனுடன் சேர்ந்திருக்கும் Firefox Lite இன் பதிப்போடு இந்த சேவைகளைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள். அவ்வாறு செய்வதற்கான உரிமைகளை Mozilla உங்களுக்கு வழங்குகிறது. Mozilla வும் அதன் உரிமவழங்குநர்களும் சேவைகளின் மற்ற எல்லா உரிமைகளையும் கொண்டிருக்கிறார்கள். இந்த விதிமுறைகள் Firefox Lite மற்றும் Firefox Lite உடன் தொடர்புடைய மூலக் குறியீட்டுப் பதிப்புகளுக்கும் பொருந்தக்கூடிய திறந்த மூல உரிமங்களின் கீழ் வழங்கப்படும் எந்த உரிமைகளையும் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டவை அல்ல.

  4. சேவைகள் "உள்ளது போலவே" வழங்கப்படுகின்றன. Mozilla, அதன் பங்களிப்பாளர்கள், உரிமவழங்குநர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ, வரம்பில்லாத, வணிகரீதியான சேவைகள் மற்றும் உங்கள் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக பொருந்தக்கூடிய உத்தரவாதங்கள் உட்பட அனைத்து உத்தரவாதங்களையும் மறுக்கிறார்கள். உங்கள் நோக்கங்களுக்காகச் சேவைகளைத் தேர்ந்தெடுப்பது மற்றும் சேவைகளின் தரம் மற்றும் செயல்திறன் போன்ற மொத்த அபாயத்தையும் நீங்களே ஏற்கவேண்டும். சில அதிகார வரம்புகள் மறைமுகமான உத்தரவாதங்களை விலக்கவோ கட்டுப்படுத்தவோ அனுமதிக்காது. எனவே இந்த விலக்குகளும் வரையறைகளும் உங்களுக்கு பொருந்தாமல் போகலாம்.

  5. சட்டப்படி தேவைப்படுவதைத் தவிர, Firefox Lite இன் பயன்பாடு தொடர்பான எந்த வகையிலும் எழும் எந்தவொரு மறைமுக, சிறப்பு, தற்செயலான, விளைவுரீதியான, தண்டனை அபராதம் அல்லது முன்மாதிரியான சேதங்களுக்கு Mozilla, அதன் பங்களிப்பாளர்கள், உரிமவழங்குநர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள். இந்த விதிமுறைகளின் கீழ் கூட்டுப் பொறுப்பு $ 500 (ஐந்நூறு அமெரிக்க டாலர்கள்) ஐ விட அதிகமாக இருக்காது. சில அதிகார வரம்புகள் சில சேதங்களை விலக்கவோகட்டுப்படுத்தவோ அனுமதிக்காது. எனவே இந்த விலக்குகளும் வரைமுறைகளும் உங்களுக்குப் பொருந்தாமல் போகலாம்.

  6. Mozilla இந்த விதிமுறைகளை அவ்வப்போது புதுப்பிக்கலாம். Mozilla இன் எழுத்துப்பூர்வ ஒப்புதல் இல்லாமல், இந்த விதிமுறைகள் மாற்றப்படவோ அல்லது ரத்து செய்யப்படவோ கூடாது.

  7. இந்த விதிமுறைகள் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணச் சட்டங்களால் அதன் சட்ட விதிமுறைகளின் முரண்பாடுகளைத் தவிர்த்து நிர்வகிக்கப்படுகின்றன. இந்த விதிமுறைகளில் ஏதேனும் ஒரு பகுதி செல்லாதது அல்லது செயல்படுத்த முடியாதது எனில், மீதமுள்ள பகுதிகள் அதன் முழு ஆற்றலுடனும் பலன்களுடனும் இருக்கும். இந்த சொற்களின் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பிற்கும் ஆங்கில மொழிப் பதிப்பிற்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டால், ஆங்கில மொழிப் பதிப்பே இறுதியாக எடுத்துக் கொள்ளப்படும்.