பயன்பாட்டு நிபந்தனைகள்

எந்தவொரு Mozilla இன் சேவைகளையும் பின்வரும் காரணங்களுக்காகப் பயன்படுத்தக்கூடாது:

 • சட்ட விரோதமான காரியங்களில் ஈடுபடுதல் அல்லது பொருந்தும் சட்டங்களை மீறுதல்
 • மற்றவர்களின் தனியுரிமை உரிமையை அச்சுறுத்துதல், தொந்தரவு செய்தல் அல்லது மீறுதல்; கோரப்படாத தகவல் தொடர்புகளை அனுப்புதல், அல்லது உங்களுக்குத் தொடர்பில்லாத தகவல் தொடர்புகளை தடுத்தல், கண்காணித்தல் அல்லது மாற்றுதல்
 • Mozilla இன் சமூக பங்கேற்பு வழிகாட்டுதல்களை மீறல் (குறிப்பிற்கு, https://www.mozilla.org/about/governance/policies/participation/ பார்க்கவும்)
 • வைரஸ்கள், ஸ்பைவேர் அல்லது தீம்பொருள், புழுக்கள், ட்ரோஜன் ஹார்ஸ், டைம் பாம்கள் அல்லது இது போன்று வேறு தீங்கிழைக்கும் குறியீடுகள் அல்லது அறிவுறுத்தல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி பயனர்களுக்குத் தீங்கிழைத்தல்
 • கணக்குப் பெயர்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிகள் உட்பட, ஆனால் இது மட்டும் இல்லாமல் தனிப்பட்ட அடையாளத் தகவலைச் சேகரித்தல்
 • Mozilla இன் சேவைகள் அல்லது தயாரிப்புகளில் (அல்லது Mozilla இன் சேவைகளுடன் இணைக்கப்பட்ட சர்வர்கள் மற்றும் நெட்வொர்க்குகள்) குறுக்கிடும் அல்லது பாதிக்கக்கூடிய செயல்களில் ஈடுபடுதல்
 • எந்த நோக்கங்களுக்காகவும் Mozilla இன் சேவைகள் அல்லது தயாரிப்புகளை மறுதயாரித்தல், போலியாக உருவாக்குதல், நகலெடுத்தல், விற்பனை செய்தல், பரிமாற்றம் செய்தல் அல்லது மறுவிற்பனை செய்தல்
 • பதிப்புரிமை, வர்த்தக முத்திரை அல்லது பிறரின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறுதல்
 • பின்வரும் உள்ளடக்கங்களைப் பதிவேற்றுதல், பதிவிறக்குதல், பரிமாற்றுதல், காட்சிப்படுத்தல் அல்லது அணுகல் அனுமதி வழங்கல்:
  • சட்ட விரோதமான அல்லது சட்ட விரோதமான செயல்முறைகளை ஊக்குவிக்கும் உள்ளடக்கங்கள்
  • ஆபாசம் அல்லது பாலுணர்வு தொடர்பான முறையற்ற தகவல்கள், பாலியல் அல்லது வன்முறை தொடர்பான கிராஃபிக் படங்கள் அல்லது குழந்தைகளைப் பாதிக்கும் அல்லது தீங்கு விளைவிக்கும் படங்கள் போன்றவை
  • அறிவுசார் சொத்து உரிமை அல்லது பிற உரிமையாளர் உரிமைகள் அல்லது தனியுரிமை அல்லது வெளியீட்டு உரிமைகள் உள்ளிட்ட உரிமைகளை மீறுதல்
  • ஏமாற்றுதல், தவறாக வழிநடத்துதல், மோசடி செய்தல் அல்லது களவை ஊக்குவித்தல் அல்லது பிறரின் அடையாளத்தைத் திருடுதல்
  • வேண்டுமென்றே சூதாட்டத்தை ஊக்குவித்தல்
  • சட்டவிரோதமான அல்லது தடைசெய்யப்பட்ட தயாரிப்புகள் அல்லது சேவைகளை விளம்பரப்படுத்தல் அல்லது ஊக்குவித்தல்
  • தனிப்பட்ட நபர் அல்லது குழுவிற்கு எதிராக வயது, பாலினம், இனம், இனத் தோற்றம், நாட்டினம், சமயம், பாலின அடையாளம், ஊனம், இனம், வாழுமிடம் அல்லது பாதுகாக்கப்பட்ட பிற இனப்பிரிவு ஆகியவற்றின் அடிப்படையில் இழிவுபடுத்துதல், அச்சுறுத்துதல், வன்முறையைத் தூண்டுதல் அல்லது பாதகமான நடவடிக்கையை ஊக்குவித்தல் அல்லது வெறுக்கத்தக்க பேச்சில் ஈடுபடுதல்
  • விற்பனைச் செய்வதற்காக, பயனரைத் தவறாக வழிநடத்துதல்

இந்தப் பட்டியலானது எடுத்துக்காட்டாகும், வரையறுக்கப்பட்டதல்ல, மேலும் மாற்றியமைக்கப்படக்கூடும்.

இந்த நிபந்தனைகள் அல்லது பொருந்தும் தயாரிப்பு சேவை விதிமுறைகளை மீறுவதாகக் கருதும் எந்த உள்ளடக்கத்தையும் அகற்றுவதற்கு அல்லது எந்த பயனரையும் நீக்குவதற்கான உரிமையை Mozilla கொண்டுள்ளது.