இணையத்திற்கு உகந்தது.
இவ்வுலகத்திற்கும் தகுந்தது.

Mozilla ஒரு பாரம்பரிய மென்பொருள் நிறுவனம் அல்ல. இது ஒரு இலவச,திறந்த மூல மென்பொருள்கள் கட்டுமானம் மற்றும் தொழில்நுட்பங்களை விருத்தி செய்வதன் மூலம் எல்லா மக்களினதும் இணைய அனுபவத்தை விருத்தி செய்யும் நோக்குடன் செயற்படும் ஒரு உலகந்தழுவிய சமூகமாகும். இணையத்தை திறந்த பகிரும் ஊடகமாக எண்ணத்துடன் உலகமெங்கிரும் செயற்படும் நிரலாளர்கள், சந்தை முகவர்கள், பரிசோதகர்களே நாங்கள். நாங்கள் திறந்த நியமங்கள் எல்லா இடங்களிலுமுள்ள எல்லா மக்களதும் பாதுகாப்பான, விரைவான மற்றும் மிகத்திருப்தி மிக்க இணைய அனுபவத்திற்கு வழிவகுக்கும் என்று நம்புகிறோம்.

எமது விருதுகள் பெற்ற, திறந்த மூலமென்பொருள்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் என்பன ஏறக்குறைய 70 மொழிகளில் இலவசமாக தரப்படுகின்றன.

Mozilla இன் தலைமையகம் Mountain View, California இல் இருப்பதுடன் பிராந்திய அலுவலகங்கள் Auckland, Beijing, Copenhagen, Paris, Tokyo மற்றும் Toronto ஆகிய இடங்களில் உள்ளன.